ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

‘பும்ரா சிறப்பான கம்பேக் கொடுப்பார்… அவரை மிஸ் பண்றோம்…’ – முகம்மது ஷமி பேட்டி

‘பும்ரா சிறப்பான கம்பேக் கொடுப்பார்… அவரை மிஸ் பண்றோம்…’ – முகம்மது ஷமி பேட்டி

ஷமி - பும்ரா

ஷமி - பும்ரா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் பும்ரா இடம்பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா சிறப்பான கம்பேக் கொடுப்பார் என்றும் அவரை இந்திய அணி மிஸ் செய்வதாகவும் முகம்மது ஷமி கூறியுள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்த 2 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஷமி, சிராஜ், ஷர்துல் தாகூர், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் சிறப்பாக பந்துவீசி வெற்றியை தேடித் தந்தனர். குறிப்பாக முகமது ஷமி துல்லியமான பவுலிங்கால் எதிரணியின் 3 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்தார். 15 ரன்களுக்கு நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்த பரிதாபத்திற்கு தள்ளப்பட்டது.

அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இல்லாத சூழலிலும் இந்திய அணி தொடர் வெற்றிகளைக் குவித்து வருகிறது. உலகக்கோப்பை தொடர் இந்தாண்டு நடைபெறவுள்ள நிலையில் பும்ராவின் பங்களிப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது. அடுத்து இந்தியா விளையாடவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் பும்ரா இடம்பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது. இந்நிலையில் நியூசிலாந்து உடனான வெற்றிக்கு பின்னர் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகம்மது ஷமி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

மிகச்சிறந்த ஆட்டக்காரர்கள் அணியில் இல்லாதது பாதிப்பை ஏற்படுத்தும். அதேநேரம் வீரர்கள் காயம் அடைந்தால் ஆட்டம் தடைபடாது. இருக்கும் வீரர்களை வைத்து நாம் வெற்றி பெற வேண்டும். அபாரமான பவுலர் பும்ராவை மிஸ் செய்கிறோம். அவர் விரைவில் அணிக்கு திரும்பி அணி கூடுதல் பலம் பெறும் என்று நம்புகிறேன். அவர் தனது ஃபிட்னஸில் முழு கவனம் செலுத்தி வருகிறார். அவர் அணியில் இணையும் நாளுக்காக இந்திய அணி காத்திருக்கிறது. என்று கூறினார். நியூசிலாந்து உடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் 3ஆவது மற்றும் கடைசி போட்டி இந்தூரில் நாளை மறுதினம் நடைபெறுகிறது.

First published:

Tags: Cricket