உலகக் கோப்பைக்கான இந்திய அணி தயார் - விராட் கோலி தகவல்!

We know our playing XI going into #WorldCup: #ViratKohli | ஐபிஎல் போட்டியில் நன்றாக விளையாடும் வீரர்களுக்கு உலகக் கோப்பைக்க இந்திய அணியில் இடம் இல்லை.

news18
Updated: March 14, 2019, 5:15 PM IST
உலகக் கோப்பைக்கான இந்திய அணி தயார் - விராட் கோலி தகவல்!
விராட் கோலி. (File)
news18
Updated: March 14, 2019, 5:15 PM IST
2019 உலகக் கோப்பையில் விளையாடயுள்ள இந்திய லெவன் அணியை முடிவு செய்துவிட்டோம் என்று கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 டி-20 மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதலில் நடந்த டி-20 தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

Virat Kohli, விராட் கோலி
ஆட்டமிழந்து வெளியேறும் விராட் கோலி. (Twitter)


அடுத்து நடந்த 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 3-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றிய அசத்தியது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய மண்ணில் ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றி உள்ளது. 2009-ம் ஆண்டு 4-2 என்ற கணக்கில் அந்த அணி கைப்பற்றி இருந்தது.

தோல்விக்குப் பின்னர் விராட் கோலி செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில், “உலகக்கோப்பை போட்டிக்கான 11 பேர் கொண்ட இந்திய அணி வீரர்களை முடிவு செய்துவிட்டோம். எந்த வரிசையில் ஆடுவது என்பது பற்றி தீர்மானிக்கப்பட்டு விட்டது. போட்டியின் தன்மைக்கு ஏற்றவாறு ஒரு சில மாற்றம் இருக்கலாம். ஹர்த்திக் பாண்டியா மீண்டும் அணிக்கு திரும்புவார்” என்று தெரிவித்தார்.

Virat Kohli, விராட் கோலி
வலைப்பயிற்சியில் விராட் கோலி. (ICC)


விராட் கோலியின் பேட்டி மூலம், ஐபிஎல் போட்டியில் நன்றாக விளையாடும் வீரர்கள் அணியில் சேர்க்கப்பட மாட்டார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. இதே கருத்தை சில வாரங்களுக்கு முன்பு, அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...
விரைவில் எனது திறமை ஐ.பி.எல் அணி உரிமையாளர்களுக்கு புரியும் - புஜாரா ஆதங்கம்

#IPL2019: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஆலோசகராக கங்குலி நியமனம்!

Also Watch...

First published: March 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...