`விமர்சிப்பவர்களின் வாயை மூட ஒரே வழி’ - ஜேசன் ஹோல்டர் பேட்டி

தோல்வியை விமர்சித்தவர்களின் வாயை, விளையாடி மூட வைப்போம் என மேற்கு இந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் தெரிவித்துள்ளார்

cricketnext
Updated: October 11, 2018, 3:58 PM IST
`விமர்சிப்பவர்களின் வாயை மூட ஒரே வழி’ - ஜேசன் ஹோல்டர் பேட்டி
ஜேசன் ஹோல்டர்
cricketnext
Updated: October 11, 2018, 3:58 PM IST
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அடைந்த தோல்விக்காக விமர்சித்தவர்களின் வாயை, களத்தில் விளையாடி மூட வைப்போம் என மேற்கு இந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள மேற்கு இந்திய தீவுகள் அணி இரண்டு டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. ராஜ்கோட்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 272 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இதனால், 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

ஐதராபாத்தில் நாளை இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்க உள்ள நிலையில், முதல் டெஸ்ட்டில் ஏற்பட்ட தோல்விக்கு மேற்கு இந்திய தீவுகள் அணி பதிலடி கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அந்த அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும் போது, ``முதல் டெஸ்ட் போட்டியில் தோற்ற உடன் பல விமர்சனங்கள் எழுதுள்ளன. கடந்த 5 ஆண்டில் மட்டும் அணிக்கு பல பயிற்சியாளர்கள் மாறியுள்ளனர். இது மிகவும் கடினமானது. ஒவ்வொரு பயிற்சியாளருடனும் அணி வீரர்கள் ஒத்துப்போக வேண்டும். திரைக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்பது பற்றி நிறைய பேர் புரிந்துகொள்ளவில்லை.

அணியில் ஒவ்வொரு வீரரின் பங்களிப்பு என்பது எனக்கு தெரியும். அதனால், மற்றவர்கள் சொல்வதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ள போவதில்லை. இது வெறும் அழுத்தத்தை குறைக்கும் கருத்து அல்ல. உண்மையை சமாளித்தே ஆக வேண்டும். தற்போதைய பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா பன்முகத்தன்மை கொண்டவராக உள்ளார்.

நம்பர் 1 அணிக்கு எதிராக விளையாடி வருகிறோம். 1994-க்கு பிறகு இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டி வென்றதில்லை என வரலாறு கூறுகிறது. கடந்த 4 அல்லது 5 டெஸ்ட் தொடர்களில் நாங்கள் இரண்டில் வென்றுள்ளோம். இருந்தும், எங்களை நோக்கி ஏன் இப்படி விமர்சனங்கள் வருகின்றன என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. விமர்சனம் செய்பவர்களின் வாயை மூட ஒரே வழிதான் உள்ளது. அது நன்றாக விளையாடுவது மட்டுமே’’  என்று ஜேசன் ஹோல்டர் கூறினார்.
First published: October 11, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...