Home /News /sports /

BAN vs NZ: நான் வங்கதேச விமானப்படை வீரன், வாலிபால் ஆடியவன் - பவுலிங் ஹீரோ இபாதத் ஹுசைனின் வைரல் பேட்டி

BAN vs NZ: நான் வங்கதேச விமானப்படை வீரன், வாலிபால் ஆடியவன் - பவுலிங் ஹீரோ இபாதத் ஹுசைனின் வைரல் பேட்டி

வங்கதேச பவுலிங் ஹீரோ இபாதத் ஹுசைன் வைரல் பேட்டி

வங்கதேச பவுலிங் ஹீரோ இபாதத் ஹுசைன் வைரல் பேட்டி

நியூசிலாந்து டெஸ்ட் சாம்பியன்கள்தான், ஆனால் அவர்களை அவர்கள் மண்ணில் தோற்கடித்தால் வங்கதேசத்தின் அடுத்த தலைமுறை உத்வேகமும் அகத்தூண்டுதலும் பெறும்- வங்கதேச புதிய பவுலிங் ஹீரோ இபாதத் ஹுசைன் வைரல் பேட்டி.

  • Cricketnext
  • 2 minute read
  • Last Updated :
    வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் இபாதத் ஹுசைன், இவரால் இன்று நியூசிலாந்தில் வங்கதேசம் அரிய டெஸ்ட் வெற்றியைப் பெற்றது, இவர் 2வது இன்னிங்சில் அபாரமாக பந்து வீசி 46 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் கைப்பற்றி நியூசிலாந்தை 2வது இன்னிங்சில் 169 ரன்களுக்கு சுருட்டினார், இதனால் வங்கதேசம் 17 டெஸ்ட் போட்டிகள் தொடர் உள்நாட்டு வெற்றி கண்ட நியூசிலாந்துக்கு முட்டுக்கட்டை போட்டது.

    இவரது ஸ்பெஷாலிட்டி விக்கெட் எடுத்ததும் சல்யூட் செய்வது, இவரது சல்யூட் இப்போது வைரலாகி வருகிறது:



    இந்த இபாதத் ஹுசைன் வங்கதேச விமானப்படையில் வீரராக இருந்தவர், வாலிபால் பிளேயராக இருந்தவர் அங்கிருந்து நீண்ட பயணத்தின் மூலம் கிரிக்கெட்டுக்கு வந்தவர். இதற்கு முன்பு ஆடிய 10 டெஸ்ட் போட்டிகளில் இவரது சராசரி 50 க்கும் மேல் என்று பவுலிங்கில் சொதப்பித்தான் வந்தார், இந்நிலையில் மோமினுல் ஹக் கேப்டன்சியில் இவர் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டார், இவரது ஸ்டம்ப் டு ஸ்டம்ப் மற்றும் 4வது ஸ்டம்ப் லைன் பவுலிங் அற்புதமாகக் கைகொடுத்தது.

    நியூசிலாந்துக்கு எதிராக நியூசி மண்ணில் அரிய டெஸ்ட் வெற்றி.


    அதுவும் இரண்டாவது இன்னிங்சில் இன்றைய டெஸ்ட் அரங்கில் சிறந்த வீரரான டெவன் கான்வேயை வீழ்த்தியது திருப்பு முனையாக அமைந்த்து, முதல் இன்னிங்ஸில் டெவன் கான்வே சதம் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று வந்து ராஸ் டெய்லருக்கும் அதியற்புதமான பந்தை வீசினார் இபாதத் ஹுசைன், இவர் 11 டெஸ்ட்களில் 18 விக்கெட்டுகள்தான் எடுத்துள்ளார்.

    27 வயது ஆகிறது இவருக்கு இன்னும் 4 ஆண்டுகள் கரியர் முழு வேகத்துடன் வீச இவரால் முடியும் என்றே தெரிகிறது. இந்நிலையில் இன்று ஆட்டம் முடிந்தவுடன் ஆட்ட நாயகன் விருது வழங்கும் நிகழ்ச்சியில் அவர் கொடுத்த பேட்டி வைரலாகி வருகிறது.

    “எங்கள் அணி நாங்கள் இங்கு வரும்போது ஒரே கொள்கையுடன் வந்தது, நியூசிலாந்தை அவர்கள் மண்ணில் வீழ்த்த வேண்டும் என்பதே அது. நியூசிலாந்தில் எங்கள் சகோதரர்களும் அணிகளும் 21 ஆண்டுகளாக வெற்றி பெறவில்லை. இந்தமுறை நாங்கள் ஒரு இலக்கை வரிந்து கொண்டோம். அதாவது நியூசிலாந்தை அவர்கள் மண்ணில் வீழ்த்தியே தீருவது என்பதே அந்த லட்சியம், அந்த உறுதி மொழி. நம்மால் முடியும் என்று நம்பினோம்.

    நியூசிலாந்து டெஸ்ட் சாம்பியன்கள்தான், ஆனால் அவர்களை அவர்கள் மண்ணில் தோற்கடித்தால் வங்கதேசத்தின் அடுத்த தலைமுறை உத்வேகமும் அகத்தூண்டுதலும் பெறும்.

    கடந்த 2 ஆண்டுகளாக பயிற்சியாளர் ஓட்டிஸ் கிப்சனுடன் கடினமாக உழைத்தேன். வங்கதேசத்தில் பிட்சில் வேகப்பந்து வீச்சுக்கு ஒன்றும் இருக்காது. வெளிநாடுகளில் எப்படி வீசுவது ரிவர்ஸ் ஸ்விங் எப்படி போடுவது என்பதை இன்னமும் கூட கற்றுக் கொண்டுதான் இருக்கிறோம். நான் எப்போதும் ஆஃப் ஸ்டம்புக்கு மேல்தான் குறி வைப்பேன். சக்சஸ் என்னைத் தேடி வர நான் பொறுமை காக்க வேண்டியிருந்தது.

    Also Read: BAN vs NZ 1st test| உலக டெஸ்ட் சாம்பியன் நியூசிலாந்தை வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று வெற்றி

    நான் ஒரு ராணுவ வீரன், வங்கதேச விமானப்படை வீரன் நான். எனவே முறையான சல்யூட் எப்படி வைப்பது என்பது எனக்குத் தெரியும். வாலிபாலிலிருந்து கிரிக்கெட்டுக்கு வந்தது ஒரு நீண்ட நெடுங்கதை. எனக்கு கிரிக்கெட் பிடித்திருக்கிறது, வங்கதேசத்தையும் வங்கதேச விமானப்படையையும் பிரதிநிதித்துவம் செய்வது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது” என்றார் புதிய ஹீரோ இபாதத் ஹுசைன்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Bangladesh, First test cricket match, New Zealand

    அடுத்த செய்தி