Home /News /sports /

பல தடைகளைக் கடந்து வந்து வென்றுள்ளோம் - நடராஜன் நெகிழ்ச்சிப் பகிர்வு

பல தடைகளைக் கடந்து வந்து வென்றுள்ளோம் - நடராஜன் நெகிழ்ச்சிப் பகிர்வு

நடராஜன் நெகிழ்ச்சி.

நடராஜன் நெகிழ்ச்சி.

இந்தியா ஏ அணிக்கு ஆடாமலேயே நடராஜனும், வாஷிங்டன் சுந்தரும் இந்திய அணிக்கு ஆடி பிரமாதப்படுத்தி அனைவரின் பாராட்டுதல்களுக்கும் உரியவரானார்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வரலாறு காணாத வெற்றி பெற்ற இந்திய அணி அந்தத் தொடரில் டி20 தொடரைக் கைப்பற்றியது. ஒருநாள் தொடரை இழந்தது. டெஸ்ட் தொடரை 2-1 என்று கைப்பற்றியது.

    டி.நடராஜன் இதில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமாகி இந்திய அணி வெற்றி பெற பெரும்பங்கு வகித்தார். பிறகு டெஸ்ட் தொடரிலும் பிரமாதப்படுத்தி ஒரே தொடரில் அனைத்து வடிவங்களிலும் விளையாடிய முதல் இந்திய வீரர் ஆனார்.

    இந்தியா ஏ அணிக்கு ஆடாமலேயே நடராஜனும், வாஷிங்டன் சுந்தரும் இந்திய அணிக்கு ஆடி பிரமாதப்படுத்தி அனைவரின் பாராட்டுதல்களுக்கும் உரியவரானார்கள்

    டெஸ்ட் தொடரில் பிரிஸ்பன் டெஸ்ட்டில் அறிமுகமாகி இவர் எப்படி வீசப்போகிறாரோ என்று கவலைப்பட்டவர்களின் கவலைகளைப் போக்கும் விதமாகவிக்கெட்டுகளைக் கைப்பற்றி வலுவாகச் சென்று கொண்டிருந்த லபுஷேன் உட்பட 3 விக்கெட்டுகளைக்கைப்பற்றி கவனத்தை ஈர்த்தார்.

    இந்திய வரலாற்று பிரிஸ்பன் டெஸ்ட் வெற்றியில் இவரது பெயரும் பொறிக்கப்பட்டது. நெட் பவுலரிலிருந்து நட்டுவாக ஜொலிக்கும் இவருக்கு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், “கடந்த 2 மாதங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்டது, நம்ப முடியாததாக இருந்தது. இந்திய அணியுடனான எனது அனுபவம் என் வாழ்க்கையின் சிறந்த தருணமாகும்.

    இந்திய அணிக்கு டெஸ்ட் கிரிக்கெட் ஆடுவதென்பது பெரும் கனவு. இந்தத் தொடரில் பல தடைகளைக் கடந்து வந்து தொடரை வென்றுள்ளோம். உங்கள் ஆதரவினால் மகிழ்ச்சி பொங்குகிறது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Cricketer natarajan, India vs Australia, T natarajan

    அடுத்த செய்தி