ஆஸி.க்கு எதிராக இந்திய அணி இப்படி ஆதிக்கம் செலுத்த ‘தாதா’ கங்குலியே காரணம்: பிராட் ஹாக் புகழாரம்

ஆஸி.க்கு எதிராக இந்திய அணி இப்படி ஆதிக்கம் செலுத்த ‘தாதா’ கங்குலியே காரணம்: பிராட் ஹாக் புகழாரம்

சவுரவ் கங்குலி

2003-04 தொடரில் கங்குலி தலைமையில் ஆஸ்திரேலியா சென்ற போது அடிலெய்டில் வென்று பிறகு மெல்போர்னில் தோற்றாலும் தொடரை சமன் செய்தார் கங்குலி, ஸ்டீவ் வாஹ் ஓய்வு பெறும் வைபவம் டிராவுடன் தான் நிறைவேறியது.

 • Share this:
  இந்திய-ஆஸ்திரேலியப் போட்டிகள் பிரபலமடைந்து இந்திய அணி ஆஸ்திரேலியாவை இன்று ஆதிக்கம் செலுத்துகிறது என்றால் அதற்குக் காரணம் தாதா கங்குலியின் முந்தைய அதிரடி கேப்டன்சிதான் என்று ஆஸ்திரேலிய முன்னாள் இடது கை சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் புகழாரம் சூட்டியுள்ளார்.

  கங்குலிதான் ஆஷஸ் தொடரிலிருந்து பார்டர்-கவாஸ்கர் டிராபி பக்கம் ரசிகர்களைத் திருப்பியது என்கிறார் பிராட் ஹாக்.

  சச்சின் டெண்டுல்கர் கேப்டன்சியில் 9 கர்நாடகா வீரர்களுடன் கர்நாடகாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்குமா டெஸ்ட் போட்டி என்று வியக்கும் அளவுக்கு 1999ம் ஆண்டு தொடர் படுமோசமாகி சச்சின் தலைமையில் 3-0 என்று இந்திய அணி உதை வாங்கியது, சச்சின் டெண்டுல்கர் மனம் நொந்து கேப்டன்சியை கங்குலியிடம் அளிக்க வலியுறுத்தினார்.

  2001-ல் ஸ்டீவ் வாஹ் தலைமை ஆஸ்திரேலிய அணி இங்கு வருகிறது, 16 டெஸ்ட் போட்டிகளில் வரிசையாக வென்று 17வதாக மும்பையிலும் இங்கு வந்து வெற்றி பெற்றது வெல்ல முடியா ஸ்டீவ் வாஹ் தலைமை ஆஸ்திரேலிய அணி, ஆனால் கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் பாலோ ஆனிலிருந்து மீண்டெழுந்து வென்ற இந்திய அணி பிறகு சென்னை டெஸ்ட்டிலும் போராடி வென்று தொடரை 2-1 என்று கைப்பற்றியது, அன்று தொடங்கியது இந்திய-ஆஸ்திரேலிய பகைமை.

  2003-04 தொடரில் கங்குலி தலைமையில் ஆஸ்திரேலியா சென்ற போது அடிலெய்டில் வென்று பிறகு மெல்போர்னில் தோற்றாலும் தொடரை சமன் செய்தார் கங்குலி, ஸ்டீவ் வாஹ் ஓய்வு பெறும் வைபவம் டிராவுடன் தான் நிறைவேறியது.

  இதையெல்லாம் வைத்துத்தான் பிராட் ஹாக் கூறுகிறார், “கங்குலிதான் இந்திய-ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டிகளை விறுவிறுப்பாக்கினார். நாங்கள் அப்போது எங்கு சென்றாலும் நெஞ்சை நிமிர்த்தி எதிரணி வீரர்களை ஒருவாறு ஸ்லெட்ஜ் செய்து ஆதிக்கம் செலுத்தினோம் ஆனால் கங்குலிதான் முதல் முறையாக அதற்கு ஆப்பு வைத்து எங்களை சற்றே பின்னடையச் செய்தார்.

  ஸ்டீவ் வாஹ் காத்திருக்க டாஸிற்கு சற்று தாமதமாக வந்து ஸ்டீவ் வாஹை திரும்பிப் பார்க்க வைத்தார். கங்குலி சீருடையிலும் அப்போது இல்லை.

  ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வார்த்தைப் பிரயோகம் என்று தைரியம் காட்டியவர் கங்குலி. ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு சவால் அளித்தார். எங்கள் மண்ணில் எங்களுக்கு சவால் அளிப்பதை நாங்கள் விரும்ப மாட்டோம். எங்களை நெருக்கடிக்குத் தள்ளினால் நாங்கள் பலவீனமடைந்து எங்கள் எதிர்வினை வித்தியாசமாக இருக்கும்.

  ஆனால் சிட்னியில் டிம் பெய்ன் தன் பணியிலிருந்து கவனத்தை எடுத்து விட்டு எதிரணி பேட்ஸ்மனை பிரிஸ்பனுக்கு வா பார்க்கலாம் என்றெல்லாம் பேசினால் அது கவனத்தை இழக்கச் செய்யும் வேலையாகும். அதாவது ஆஸி. கவனத்தை இழந்து விட்டது. இப்போதைக்கு இந்திய அணியிடம் எனக்குப் பிடித்ததே எங்கள் ஆட்டத்தில் எங்களையே தோற்கச் செய்கின்றனர்.” என்றார் பிராட் ஹாக்.

  சிட்னியில் அன்று செய்த டிரா ஆஸ்திரேலியர்களை எப்படியெல்லாம் பாதித்துள்ளது!!
  Published by:Muthukumar
  First published: