ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

’நானும் தோனியும் ஆதரவளிக்கவில்லை எனில்  விராட் கோலி நீக்கப்பட்டிருப்பார்’

’நானும் தோனியும் ஆதரவளிக்கவில்லை எனில்  விராட் கோலி நீக்கப்பட்டிருப்பார்’

Virat Kohli

Virat Kohli

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  விராட் கோலிக்கு தானும் தோனியும் ஆதரவளிக்கவில்லையெனில் டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்டிருப்பார் என்று விரேந்திர சேவாக் சமீபத்தில் தெரிவித்துள்ளார். விராட் கோலி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2011-ல் டெஸ்ட்டில் அறிமுகமானார்.

  ஆரம்ப காலத்தில் கோலி கொஞ்சம் தடுமாறினார், இதனால் பெஞ்சில் அமர வைக்கப்பட்ட நாட்களும் உண்டு. அப்போது அணியிலிருந்து கோலியை நீக்கியிருப்பார்கள் என்றும் தோனியும் தானும் இல்லையெனில் அவர் நீடித்திருக்க முடியாது என்றும் சேவாக் தெரிவித்துள்ளார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அறிமுகத் தொடரில் கோலி 76 ரன்களை மட்டுமே எடுத்தார்.

  அந்தக் காலக்கட்டத்தில் ஆஸ்திரேலியா தொடரிலும் மற்ற இந்திய வீரர்களைப் போல் கோலியும் தடுமாறினார். 3வது டெஸ்ட்டுக்கு முன்னதாக கோலியை எடுக்கலாமா வேண்டாமா என்ற சிந்தனை அணி நிர்வாகத்தில் ஏற்பட்டது. ஆனால் அப்போதைய கேப்டன் தோனி, துணைக் கேப்டன் விரேந்திர சேவாக் கோலியை நீக்கக் கூடாது என்று அவருக்கு ஆதரவு அளித்தனர்.

  2015-ல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற சேவாக் இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஒன்றின் போது வர்ணனையில் இதனைத் தெரிவித்தார். சேவாக் கூறியதாவது, “2012 பெர்த் டெஸ்ட்டுக்கு முன்பாக கோலிக்குப் பதில் ரோகித் சர்மாவை அணியில் எடுக்க தேர்வுக்குழுவினர் விரும்பினர். நான் அப்போது வைஸ் கேப்டன் தோனி கேப்டன். அப்போது நானும் தோனியும் கோலிக்கு ஆதரவளிக்க முடிவெடுத்து ஆதரவு தெரிவித்தோம். மீதியெல்லாம் இப்போது வரலாறு.” என்றார் சேவாக்.

  அப்போது இவர்கள் காப்பாற்றியது உடனடியாகப் பலன் அளித்தது. பெர்த் டெஸ்ட் போட்டியிலேயே விராட் கோலி முதல் இன்னிங்சில் 44 ரன்களையும் 2வது இன்னிங்சில் 75 ரன்களையும் எடுத்தார், இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 37 ரன்களில் தோற்றது. பிறகு 4வது டெஸ்ட் போட்டியில் கோலி சதமெடுத்தார், பிறகு அதே தொடரின் முத்தரப்பு ஒருநாள் தொடரில் கோலி 373 ரன்களை எடுத்தார். இதனையடுத்து ஆசியக் கோப்பை தொடருக்கு கோலி துணைக் கேப்டனாக பதவி உயர்வு பெற்றார்.

  அதன் பிறகான ஆஸ்திரேலிய தொடரில் 2014-ல் கேப்டனாக பின்னி எடுத்தார், 2018-ல் ஆஸ்திரேலியாவை அங்கு வீழ்த்தி துணைக்கண்டத்தின் சிறந்த கேப்டன், ஆஸ்திரேலியாவை வீழ்த்திய முதல் துணைக்கண்ட அணி என்ற பெருமையை இந்திய அணிக்கு தேடித்தந்தார். அன்று மட்டும் தோனி, சேவாக் இவரை காப்பாற்றவில்லை எனில் யார் கண்டார்கள் இன்று கோலி போல் ஒரு வீரர் நமக்கு கிடைக்காமலேயே கூட போயிருக்கலாம்.

  Published by:Muthukumar
  First published:

  Tags: Captain Virat Kohli, MS Dhoni, T20 World Cup, Virender sehwag