இன்னும் 4000 ரன்களுக்கு மேல் விளாசியிருப்போம்...! ஐசிசி ட்வீட்டுக்கு பதிலளித்த சச்சின் - கங்குலி இணை

கிரிக்கெட் கடவுளும் - கிரிக்கெட் தாதாவும் பரிமாறிக்கொண்ட இந்த ரன் சேட்டிங் டிவிட்டரில் டிரண்டிங்கில் உள்ளது.

இன்னும் 4000 ரன்களுக்கு மேல் விளாசியிருப்போம்...! ஐசிசி ட்வீட்டுக்கு பதிலளித்த சச்சின் - கங்குலி இணை
சச்சின் மற்றும் கங்குலி
  • Share this:
கிரிக்கெட் அரங்கில் தற்போது இருக்கும் விதிமுறைகள் தாங்கள் விளையாடும் போது இருந்திருந்தால் இன்னும் 4000 ரன்களுக்கு மேல் விளாசியிருப்போம் என ஐசிசி டிவிட்டர் பதிவிற்கு சச்சின், கங்குலி இருவரும் தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

கொரோனா அச்சத்தால் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த வேளையில் பிரபலங்கள் சமூக வலைதளங்கள் மூலமாக நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் ஐசிசி தனது டுவிட்டர் பக்கத்தில் சச்சின் -கங்குலி இணையை கவுரவிக்கும் விதமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

கிரிக்கெட் அரங்கில் ஆல் டைம் சிறந்த பாட்னர்ஷிப் ஆக பார்க்கப்படும் இவர்கள் 176 ஒருநாள் போட்டிகளில் 8227ரன்கள் குவித்து, அதிக ரன்கள் குவித்த இணை என்ற சாதனையை பெற்றுள்ளது. குறிப்பாக இதுவரை எந்த பாட்னர்ஷிப் -ம் ஆறாயிரம் ரன்களுக்கு மேல் எடுத்ததில்லை என குறிப்பிட்டுள்ள ஐசிசி, ஜாம்பவான்களான இவர்கள் இருவரின் ஸ்கோரையும் குறிப்பிட்டு கவுரவித்தது.


ஐசிசி-யின் இந்த பதிவிற்கு பதிலளித்த சச்சின், தற்போதைய கிரிக்கெட் விதிகள் அப்போது நடைமுறையில் இருந்திருந்தால் இன்னும் கூடுதலாக நிறைய ரன்கள் அடித்திருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சச்சின், இது மிகச்சிறந்த நினைவுகளை கொடுத்துள்ளது எனவும், 4 பீல்டர்கள் மற்றும் 2 புதிய பந்து விதிகள் அப்போது இருந்திருந்தால் இன்னும் எவ்வளவு ரன்கள் அடித்திருக்கலாம் தாதா என தனது நினைவை கங்குலியை டேக் செய்து கேட்டிருந்தார்.

இதற்கு பதில் டுவிட் பதிவிட்டுள்ள, தாதா கங்குலி நான்காயிரம் ரன்கள் அல்லது அதற்கு மேல்... போட்டியின் முதல் ஓவரில் கவர் டிரைவில் பவுண்டரிக்கு பறப்பது போன்ற உணர்வு என குறிப்பிட்டிருந்தார்.கிரிக்கெட் கடவுளும் - கிரிக்கெட் தாதாவும் பரிமாறிக்கொண்ட இந்த ரன் சேட்டிங் டிவிட்டரில் டிரண்டிங்கில் உள்ளது.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.Also see...
First published: May 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading