ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

விராட் கோலி தன் ‘ஈகோ’-வை விட்டொழிக்க வேண்டும்- கபில் தேவ் அட்வைஸ்

விராட் கோலி தன் ‘ஈகோ’-வை விட்டொழிக்க வேண்டும்- கபில் தேவ் அட்வைஸ்

விராட் கோலி-கபில்தேவ்

விராட் கோலி-கபில்தேவ்

சுனில் கவாஸ்கர் கூட எனக்கு கீழ் விளையாடினார். நான் கே.ஸ்ரீகாந்த் மற்றும் அசாருதின் கீழ் விளையாடினேன். எனக்கு ஈகோ இல்லை. விராட் தனது ஈகோவை விட்டுவிட்டு இளம் கிரிக்கெட் வீரரின் கீழ் விளையாட வேண்டும்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலக விராட் கோலி முடிவு செய்ததில் இருந்து கிரிக்கெட் பண்டிதர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சனிக்கிழமையன்று, ஒரு நீண்ட சமூக ஊடக இடுகையின் மூலம் அறிவிப்பை வெளியிட்டார் கோலி. அதில் அவர் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எல்லாம் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது சிறப்பான கேப்டன்சி சாதனைக்காக கோலியை கிரிக்கெட் உலகம் பாராட்டியது. முன்னாள் ஆல்ரவுண்டரும் கேப்டனுமான கபில் தேவும் கோலியை பாராட்டினார் அதே வேளையில் அட்வைஸும் வழங்கினார்.

  கபில் கோலியின் சிறப்பான ஆட்டத்திற்காக வாழ்த்தினார், ஆனால் கோலி மீது ஏற்றப்பட்ட கேப்டன்சியின் சுமையை அடிக்கோடிட்டுக் காட்டினார். 33 வயதான கோலி 2021 இல் 11 டெஸ்டில் 536 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 28.21 சராசரி.

  இது தொடர்பாக கபில் தேவ் கூறும்போது, “டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகும் விராட்டின் முடிவை நான் வரவேற்கிறேன். டி20 கேப்டன் பதவியை கைவிட்டதில் இருந்து அவர் கடினமான காலகட்டத்தை அனுபவித்தார். சமீப காலமாக பதட்டமாக காணப்பட்ட அவர், அதிக அழுத்தத்தில் இருப்பதாகத் தெரிகிறது. எனவே, சுதந்திரமாக விளையாடுவதற்கு கேப்டன் பதவியை கைவிடுவது ஒரு விருப்பமாக இருந்தது. அவர் அதைத் தேர்ந்தெடுத்தார்.

  அவர் ஒரு முதிர்ந்த மனிதர். இந்த முக்கியமான முடிவை எடுப்பதற்கு முன் அவர் கடுமையாக யோசித்திருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். ஒருவேளை, அவர் கேப்டன் பதவியை மகிழ்ச்சியாக அனுபவிக்கவில்லை என்பதாக இருக்கலாம். நாம் அவருக்கு ஆதரவளித்து அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்க வேண்டும்,

  சுனில் கவாஸ்கர் கூட எனக்கு கீழ் விளையாடினார். நான் கே.ஸ்ரீகாந்த் மற்றும் அசாருதின் கீழ் விளையாடினேன். எனக்கு ஈகோ இல்லை. விராட் தனது ஈகோவை விட்டுவிட்டு இளம் கிரிக்கெட் வீரரின் கீழ் விளையாட வேண்டும். இது அவருக்கும் இந்திய கிரிக்கெட்டுக்கும் உதவும். புதிய கேப்டன், புதிய வீரர்களை விராட் வழிநடத்த வேண்டும். பேட்ஸ்மேனான விராட்டை எங்களால் இழக்க முடியாது... வழியில்லை,” என்றார் கபில்தேவ்.

  குறைந்த ஓவர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மாவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், டெஸ்ட் போட்டிகளில் கோலியின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் வாய்ப்பு யாருக்கு கிடைக்கும் என்பது இன்னும் தெரியவில்லை.

  Published by:Muthukumar
  First published:

  Tags: Captain Virat Kohli, Virat Kohli