ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

'உலகக்கோப்பை தொடருக்காக இளம் வீரர்களை தயார்படுத்த வேண்டும்' - கபில்தேவ் வலியுறுத்தல்

'உலகக்கோப்பை தொடருக்காக இளம் வீரர்களை தயார்படுத்த வேண்டும்' - கபில்தேவ் வலியுறுத்தல்

கபில் தேவ்

கபில் தேவ்

உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் சற்று கடினமான முடிவுகளை அணி நிர்வாகம் எடுக்க வேண்டும். – கபில் தேவ்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகக்கோப்பை தொடருக்காக இளைஞர்களை தயார்படுத்த வேண்டும் என்று கபில் தேவ் வலியுறுத்தியுள்ளார். இந்தாண்டு இறுதியில் உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதையொட்டி சமீபத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ, ஆலோசனை நடத்தியது. இதன் முடிவில் 20 பேர் கொண்ட உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் மூத்த கிரிக்கெட் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கே.எல். ராகுலுக்கு இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் கே.எல். ராகுல் கடந்த சில போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியின் துணைக் கேப்டன் பொறுப்பில் கே.எல்.ராகுல் இருக்கிறார்.

இந்நிலையில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மற்றும் இந்திய அணி குறித்து கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- இந்தாண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல ஆர்வம் காட்டுகிறது. உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் சற்று கடினமான முடிவுகளை அணி நிர்வாகம் எடுக்க வேண்டும்.

தனிப்பட்ட விஷயங்களை தவிர்த்து விட்டு அணியைப் பற்றி நாம் யோசிக்க வேண்டும்.

விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற 2-3 வீரர்களை வைத்துக் கொண்டு நம்மால் உலகக்கோப்பையை வெல்ல முடியாது. குறைந்த 5-6 மேட்ச் வின்னர்கள் அணிக்கு தேவை.

பிக்பேஷ் லீக்கில் மன்கட் செய்த ஆடம் ஸாம்பா… அவுட் தராத நடுவர்கள்… என்ன காரணம் தெரியுமா?

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். உலகக்கோப்பை தொடருக்காக இளம் வீரர்களை தயார்படுத்த வேண்டும்.

India vs Sri Lanka T20 : ஒற்றை இலக்கத்தில் வெளியேறிய சுப்மன் கில், சூர்யகுமார், சஞ்சு சாம்சன்… ரசிகர்கள் ஏமாற்றம்

அவர்களும், கோப்பையை வெல்வதற்கு உத்வேகத்துடன் இருக்க வேண்டும். வாய்ப்பு கிடைக்கும் வீரர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

First published:

Tags: Cricket