ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

உங்களை நினைத்து பெருமை கொள்கிறோம்- இந்திய மகளிர் அணிக்கு விராட் கோலி ஆறுதல்

உங்களை நினைத்து பெருமை கொள்கிறோம்- இந்திய மகளிர் அணிக்கு விராட் கோலி ஆறுதல்

இந்திய மகளிர் அணிக்கு கோலி ஆறுதல்

இந்திய மகளிர் அணிக்கு கோலி ஆறுதல்

ஞாயிற்றுக்கிழமை நடந்த வாழ்வா சாவா போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் மகளிர் உலகக்கோப்பையில் மிதாலி ராஜ் தலைமை இந்திய மகளிர் அணி போராடித் தோல்வியை சந்தித்ததை அடுத்து, முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி மகளிர் அணிக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஞாயிற்றுக்கிழமை நடந்த வாழ்வா சாவா போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் மகளிர் உலகக்கோப்பையில் மிதாலி ராஜ் தலைமை இந்திய மகளிர் அணி போராடித் தோல்வியை சந்தித்ததை அடுத்து, முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி மகளிர் அணிக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளார்.

இந்தியாவின் தோல்விக்கு ஒரு நாள் கழித்து, பேட்டிங் ஆளுமை கோலி ட்விட்டரில், 2022 உலகக் கோப்பையில் மிதாலி தலைமையிலான அணியின் அபார முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். “நீங்கள் வெல்லும் போட்டியில் இருந்து வெளியேறுவது எப்போதுமே கடினமானது, ஆனால் எங்கள் பெண்கள் அணியால் தலை நிமிர்ந்து நிற்க முடியும். . நீங்கள் அனைத்தையும் கொடுத்தீர்கள், உங்களை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம்” என்று கோலி தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார். முன்னதாக, கோலியின் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியாவின் இதயம் நொறுங்கும் தோல்விக்கு ஆறுதல் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

விராட் கோலியின் ட்விட்டர் பதிவு இதோ:

ஏற்கெனவே ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய மூன்று அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்ற நிலையில், அரை இறுதி போட்டிக்குள் நுழைய வேண்டும் எனில் இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெறுவது அவசியம் என்ற கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்கியது.

கடைசி ஓவரில் பெரு நாடகம் அரங்கேறியது. இதில் இந்திய பவுலர் தீப்தி ஷர்மா விக்கெட்டை வீழ்த்தினார் ஆனால் அது நோ-பால் ஆனது. வெற்றி பெற 2 பந்துகளில் 3 ரன்கள் தேவை என்று இருந்தது தென் ஆப்பிரிக்கா. அந்த அணியின் அபாய வீராங்கனை மிக்னன் டு பிரீஸ் லாங் ஆஃபில் கேட்ச் கொடுத்தார். ஹர்மன் பிரீத் கவுரும் கேட்சை அழகாகப் பிடித்தார். இந்திய வீராங்கனைகள் கொண்டாடினர், ஆனால் நடுவர் தென் ஆப்பிரிக்க வீராங்கனையை நிற்க என்றார். அது நோ-பால் என்று ரீப்ளேயில் தெரிந்தது. அது நாட் அவுட் ஆனதால் நோ-பால் என்பதால் 2 பந்தில் 2 ரன் தேவைப்பட்டது. அடுத்த பந்து ஃப்ரீ ஹிட்டில் ஒரு ரன், அடுத்த பந்தில் மிட்விக்கெட்டில் பிளிக் செய்து வெற்றி பெற்றது தென் ஆப்பிரிக்கா அணி.

First published:

Tags: ICC world cup, Virat Kohli