Home /News /sports /

இப்போ நாங்க வேற மாதிரி..! - விராட் கோலி

இப்போ நாங்க வேற மாதிரி..! - விராட் கோலி

விராட் கோலி

விராட் கோலி

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை நாங்கள் வெல்லுவோம் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி வரும் 21ம் தேதி வெலிங்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. நியூசிலாந்து மண்ணில் 1968ம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணி தொடரை கைப்பற்றியது. அதன்பிறகு பெரிய அளவிலான வெற்றியை இந்திய அணி பெற்றதில்லை.

நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முழுமையாக தயராகி உள்ளோம். நியூசிலாந்து பேட்டிங், பவுலிங், ஃப்லிடிங் என அனைத்திலும் சிறப்பாக உள்ளது. அவர்களுக்கு இணையான ஆட்டத்தை இந்திய வீரர்கள் வெளிப்படுத்துவார்கள்.

Also Read : பந்து வீசினால் விரல் இருக்காது என்று மிரட்டினார்கள் - சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின்

கடந்த தொடரில் நாங்கள் 1-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தோம். தற்போது இருப்பது அதே அணி இல்லை. அந்திய மண்ணில் சிறப்பாக விளையாடும் திறனில் இந்திய வீரர்கள் உள்ளனர். இந்த முறை தொடரை இந்திய அணி வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது“ என்றார்.
Published by:Vijay R
First published:

Tags: Virat Kohli

அடுத்த செய்தி