நாங்கள் இந்தியர்கள்; ஹிந்தியில் தான் பேசுவோம்...! ரோஹித் சர்மா சர்ச்சை பதில்

ரோஹித் சர்மா

 • Share this:
  நாங்கள் இந்தியர்கள், ஹிந்தியில் தான் பேசுவேம் என்று ரசிகர் ஒருவருக்கு ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார்.

  கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் முதல் உள்ளூர் போட்டிகள் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் வீரர்கள் அனைவரும் வீட்டில் ஒய்வில் உள்ளனர்.

  இதனிடையே இந்திய அணியின் தெடாக்க வீரர் ரோஹித் சர்மாவும், வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இருவரும் இன்ஸ்டாகிராமில் பேசிக் கொண்டனர். இருவரும் ஹிந்தியில் பேசியதால் ஆங்கிலத்தில் பேசுமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.

  அதனை மறுத்த ரோஹித் சர்மா நாம் அனைவரும் இந்தியர்கள் இந்தியில் தான் பேசுவோம். தொலைக்காட்சி பேட்டிகளில் தான் ஆங்கிலத்தில் பேசுவோம். நாங்கள் இப்போது வீட்டில் தான் இருக்கிறோம் என்றுள்ளார். இதற்கு பும்ராவும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

  ரோஹித் சர்மாவின் இந்த நாடு முழுவதும் பல்வேறு மொழிகள் பேசும் ரசிகர்கள் பொறுப்புணர்ந்து பேசாமல், இதுப்போன்று அலட்சியமாக பதில் சொல்வதை தவிர்க்க வேண்டும் என்று அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஹிந்தியில் தான் பேசுவேம் என்ற ரோஹித் சர்மாவின் பதில் தற்போது சர்ச்சையாகி உள்ளது.  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  Published by:Vijay R
  First published: