ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

மற்ற நாட்டு வாரியங்களின் மீதும் பிசிசிஐ-க்கு அக்கறை உண்டு: டெஸ்ட் ரத்து பற்றி தாதா கங்குலி

மற்ற நாட்டு வாரியங்களின் மீதும் பிசிசிஐ-க்கு அக்கறை உண்டு: டெஸ்ட் ரத்து பற்றி தாதா கங்குலி

கங்குலி

கங்குலி

மான்செஸ்டரில் 5வது டெஸ்ட் போட்டி ரத்தானதையடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு ஏகப்பட்ட பவுண்டுகள் நஷ்டம், லங்கா ஷயர் கிரிக்கெட் சங்கம் கிட்டத்தட்ட அழுதே விட்டது, இந்நிலையில் மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் நலினிலும் பிசிசிஐ அக்கறை கொண்டது என்று பிசிசிஐ தலைவர் தாதா கங்குலி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

மான்செஸ்டரில் 5வது டெஸ்ட் போட்டி ரத்தானதையடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு ஏகப்பட்ட பவுண்டுகள் நஷ்டம், லங்கா ஷயர் கிரிக்கெட் சங்கம் கிட்டத்தட்ட அழுதே விட்டது, இந்நிலையில் மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் நலினிலும் பிசிசிஐ அக்கறை கொண்டது என்று பிசிசிஐ தலைவர் தாதா கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் பிசியோதெரபிஸ்ட் யோகேஷ் பார்மருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் டாஸ் போடுவதற்கு 90 நிமிடங்களுக்கு முன் போட்டி ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது. பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. வீரர்கள், பயிற்சியாளர்கள், ஊழியர்கள் அனைவரும் பயோ-பபுள் சூழலுக்குள் இருந்து போட்டிகளில் பங்கேற்று வந்தும் கொரோனா தொற்று ஏற்பட்டது.

கடந்த மாதம் 31-ம் தேதி லண்டனில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் கோலி ஆகியோர் பயோபபுள் சூழலை மீறி பங்கேற்றனர். அந்தப் புத்தக விழாவுக்குச் சென்றுவந்த 2 நாட்களில் ரவிசாஸ்திரிக்கு கரோனா தொற்று உறுதியானது. அவருடன் நெருக்கமாக இருந்ததற்காக பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண், ஸ்ரீதர் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் யோகேஷ் பார்மருக்கும் கொரோனா தொற்று உறுதியானது, அவர் ரோகித் சர்மா, புஜாரா, ஷமி, இஷாந்த் சர்மா, பும்ரா ஆகியோருடன் நெருங்கி பயிற்சியளித்தார், அவருக்குக் கொரோனா என்றவுடன் அனைத்து வீரர்களும் நடுங்கி விட்டனர் என்கிறார் கங்குலி.

இது தொடர்பாக கங்குலி கூறியதாவது: “அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் அச்சமடைந்தனர். வீரர்கள் 5-வது டெஸ்ட் போட்டியில் விளையாடவும் மறுத்துவிட்டனர். இதற்கு வீரர்களை நாம் குறை கூற முடியாது. பிசியோ யோகேஷ் பார்மர் வீரர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். நிதின்படேல் தனிமைப்படுத்தப்பட்ட பின் அனைத்து வீரர்களுடனும் பார்மர் நெருக்கமாகப் பழகினார்.

டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு ஏராளமான இழப்பை ஏற்படுத்தியுள்ளது இது எளிதானதாக இல்லை. இந்த விவகாரம் சற்று ஆறியவுடன் அடுத்த நடவடிக்கை பற்றி யோசிப்போம். கடைசி டெஸ்ட் போட்டிரத்தானதற்கும் ஐபிஎல் தொடருக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. பொறுப்பற்றமுறையில் பிசிசிஐ ஒருபோதும் செயல்படாது, மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்களின் நலனிலும் பிசிசிஐ அதிக அக்கறை வைத்துள்ளது.” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: India Vs England, Sourav Ganguly