Home /News /sports /

கடவுளுக்கு நன்றி - ஆண் குழந்தை பிறந்ததையடுத்து யுவராஜ் சிங் நெகிழ்ச்சி

கடவுளுக்கு நன்றி - ஆண் குழந்தை பிறந்ததையடுத்து யுவராஜ் சிங் நெகிழ்ச்சி

யுவராஜ் சிங், மனைவி.

யுவராஜ் சிங், மனைவி.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் மற்றும் மனைவி ஹேசல் கீச் தம்பதியினருக்கு ஆண்குழந்தை பிறந்தது. இதை யுவராஜ் சிங் மற்றும் அவரது மனைவி சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் மற்றும் மனைவி ஹேசல் கீச் தம்பதியினருக்கு ஆண்குழந்தை பிறந்தது. இதை யுவராஜ் சிங் மற்றும் அவரது மனைவி சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர்.

    இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் யுவராஜ் சிங் கூறும்போது, “ கடவுள் எங்களுக்கு ஒரு ஆண் குழந்தையைப் பரிசாக அளித்துள்ளார் என்பதை எங்கள் ரசிகர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும், பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த ஆசீர்வாதத்திற்காக நாங்கள் கடவுளுக்கு நன்றி கூறுகிறோம், மேலும் குழந்தையை உலகிற்கு வரவேற்கும் போது எங்கள் பிரைவசியையும் நீங்கள் மதிக்க விரும்புகிறோம்.” என்று பதிவிட்டுள்ளார்.

    யுவராஜ் மற்றும் நடிகை ஹேசல் கீச் நவம்பர் 30, 2016 அன்று ஃபதேகர் சாஹிப் குருத்வாராவில் பாரம்பரிய முறையில் திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதியின் முதல் குழந்தை இது.

    யுவராஜ் சிங் 2000 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கென்யாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சர்வதேச அரங்கில் அறிமுகமானார், மேலும் இந்தியாவுக்காக 304 ஒருநாள் போட்டிகள், 40 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 58 டி20 போட்டிகளில் விளையாடினார். அவர் இந்தியாவின் 2007 டி20 உலகக் கோப்பையை தோனி தலைமையில் வென்று சாதனை படைத்த போதும் 2011-ம் ஆண்டு 50 ஓவர் ஐசிசி உலகக் கோப்பை வென்ற போதும் இந்திய அணியின் மிக மிக முக்கிய பங்களிப்பாளராக இருந்தார்.

    19 ஆண்டுகள் இந்திய கிரிக்கெட்டில் பணியாற்றிய பிறகு, ஜூன் 10, 2019 அன்று சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். விராட் கோலி மீண்டும் இவரை அழைத்து அணியில் சேர்த்து சாம்பியன்ஸ் டிராபியில் ஆடினார், ஒரு நல்ல இன்னிங்ஸையும் பாகிஸ்தானுக்கு எதிராக ஆடினார், பல மறக்க முடியாத வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்துள்ளார், சுலபமாக வெல்ல வேண்டிய போட்டிகளை கடைசி ஓவர் வரை இழுத்து வெற்றி பெறச் செய்பவரோ அல்லது டை செய்பவரோ பெரிய பினிஷராகக் கொண்டாடப்படும் கிரிக்கெட் உலகில் உண்மையான பினிஷராக இருந்தார் யுவராஜ் சிங்.

    அவ்வப்போது பவுலிங்கிலும் அசத்தி விக்கெட்டுகளைப் பெற்றுத் தருவார், பீல்டிங்கில் அசாத்தியமான கேட்ச்களை எடுத்தவர் யுவராஜ் சிங். அவரது முதல் குழந்தைக்காக அவருக்கு வாழ்த்துக்களை தெரிவிப்போம்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Yuvraj singh

    அடுத்த செய்தி