Home /News /sports /

மூழ்கிக்கொண்டிருக்கும் நாங்கள் உங்களையும் உள்ளே இழுப்போம் - வங்கதேசத்துக்கு ஆப்கன் கேப்டன் எச்சரிக்கை

மூழ்கிக்கொண்டிருக்கும் நாங்கள் உங்களையும் உள்ளே இழுப்போம் - வங்கதேசத்துக்கு ஆப்கன் கேப்டன் எச்சரிக்கை

ஆப்கானிஸ்தான் அணி

ஆப்கானிஸ்தான் அணி

ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணி லீக் சுற்றுடன் நடையைக் கட்டுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

  • News18
  • Last Updated :
    உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் - வங்கதேசம் அணிகள் இன்று மோத உள்ள நிலையில், எதிரணிக்கு ஆப்கன் கேப்டன் குல்பதீன் நயீப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. 45 போட்டிகளில் நேற்று வரை 30 போட்டிகள் முடிவடைந்துள்ளது.

    புள்ளிப்பட்டியலில் தலா 6 போட்டிகளில் விளையாண்டு 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் முதல் இரண்டு இடங்களில் உள்ளது.

    5 போட்டிகளில் விளையாண்டு 4 வெற்றியுடன் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து, இலங்கை, வங்கதேசம் அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது.

    அரையிறுத்திக்கு முன்னேறும் அணிகள் என்று பார்த்தால் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகளுக்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.



    நான்காவதாக உள்ளே நுழைவதற்கு இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையே போட்டி இருக்கும். அடுத்து வரும் போட்டிகளின் வெற்றி - தோல்விகளை பொறுத்து, வங்கதேசம், பாகிஸ்தான், மேற்கிந்தியத்தீவுகள் அணிகளின் நிலை தெரியவரும்.

    ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணி லீக் சுற்றுடன் நடையைக் கட்டுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

    இன்று ஆப்கானிஸ்தான் - வங்கதேசம் அணிகள் மோத உள்ளன. ஆப்கானிஸ்தான் அணி இந்திய அணிக்கு எதிரான கடந்த போட்டியில் கடும் சவாலை அளித்தது. கிட்டத்தட்ட நூலிலையிலேயே இந்தியா வெற்றி பெற்றதாக கூறலாம். தோல்வியடைந்தாலும், ஆப்கானிஸ்தான் அணி அனைவரிடன் பாராட்டையும் பெற்றது.

    இந்நிலையில், இன்றைய போட்டியில் வென்றாலும், தோற்றாலும் ஆப்கானிஸ்தான் அணி வெளியேறுவது உறுதியாகியுள்ளது.

    வங்கதேசத்துக்கு எதிரான போட்டி தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஆப்கானிஸ்தான் கேப்டன் குல்பதீன் நயீப், ”நாங்கள் ஏற்கனவே மூழ்கிக்கொண்டிருக்கிறோம் டார்லிங், ஆனால், உங்களையும் எங்களுடன் சேர்த்து இழுத்துக்கொள்வோம் என்று வங்கதேசத்துக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    ”இந்தியாவுக்கு எதிரான எங்களது ஆட்டத்தை பார்த்திருப்பீர்கள். இந்தியா சிறந்த பேட்டிங் வரிசையை கொண்டிருந்தது. எனினும், நாங்கள் உறுதியுடன் போராடினோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.

    Also See...

    உலகக்கோப்பை கிரிக்கெட் - இந்த சாதனையில் பாகிஸ்தான் முதலிடம்... கடைசி இடத்தில் இந்தியா...!


    'வாழ்க்கை ஒரு வட்டம்' - விஜய் பட வசனத்தை நிரூபித்த தல தோனி!

    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.




    Published by:Sankar
    First published:

    Tags: ICC Cricket World Cup 2019

    அடுத்த செய்தி