பிரபல சி.எஸ்.கே அதிரடி வீரர் ஓய்வு அறிவிப்பு!

#CSK | குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட உள்ளதால் அவர் ஓய்வு அறிவிப்பை தெரிவித்துள்ளார்.

பிரபல சி.எஸ்.கே அதிரடி வீரர் ஓய்வு அறிவிப்பு!
#CSK | குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட உள்ளதால் அவர் ஓய்வு அறிவிப்பை தெரிவித்துள்ளார்.
  • News18
  • Last Updated: April 26, 2019, 3:39 PM IST
  • Share this:
ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக வாட்சன் அறிவித்துள்ளார்.

சிஎஸ்கே அணியில் தொடக்க வீரராக ஷேன் வாட்சன் களமிறங்கி வருகிறார். இவருக்கு தற்போது 37 வயதாகிறது. வாட்சன் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பேஷ் தொடரில் சிட்னி தண்டர்ஸ் அணியின் கேப்டனாக இருக்கிறார்.

சிட்னி தண்டர்ஸ் அணியில் அதிக ரன்கள் சேர்த்த வீரர் என்ற பெருமையும் வாட்சனுக்கே சேரும்.


ஷேன் வாட்சன்


நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் வாட்சன் 'பிக் பேஷ்; தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட திட்டமிட்டுள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக வாட்சன் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாட உள்ளதாகாவும் தெரிவித்துள்ளார்.

ஷேன் வாட்சன் இதுவரை 700க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாடி 25,000க்கும் அதிகமான ரன்களும் 600 விக்கெட்களையும் வீழ்த்தி உள்ளார்.

சிஎஸ்கே அணியில் தொடர்ந்து விளையாடி வரும் வாட்சன் கடைசியாக நடைபெற்ற ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 53 பந்துகளில் 96 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடதக்கது.
Also Watch:

விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
First published: April 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்