VIDEO: ‘நீங்க தானே வம்புக்கு இழுத்தீங்க’ - ரிஷப் பண்ட்-ஐ வரவேற்ற ஆஸி. பிரதமர்

WATCH: You sledge right? Australian PM Ask Rishabh Pant | இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மோரிசன் புத்தாண்டு விருந்து அளித்தார்.

VIDEO: ‘நீங்க தானே வம்புக்கு இழுத்தீங்க’ - ரிஷப் பண்ட்-ஐ வரவேற்ற ஆஸி. பிரதமர்
ஆஸ்திரேலிய பிரதமர் உடன் பேசிய ரிஷப் பண்ட். (Image Credits: XtraTime /YouTube)
  • News18
  • Last Updated: January 2, 2019, 9:33 PM IST
  • Share this:
மைதானத்தில் ஆஸ்திரேலிய வீரர்களை வம்புக்கு இழுத்த இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்-ஐ அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 3 போட்டிகளின் முடிவில் 2-1 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. மெல்போர்னில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்களை, இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் பயங்கரமாக வம்புக்கு இழுத்தார்.

Rishab Pant, ரிஷப் பண்ட்.
ஆஸி. கேப்டன் டிம் பெய்னைக் கிண்டல் செய்த விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட். (Video Grab)



இந்நிலையில், 4-வது போட்டியில் பங்கேற்க சிட்னி வந்து சேர்ந்த இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலிய அணி வீரர்களை அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மோரிசன் கிரிபிலி தனது இல்லத்துக்கு அழைத்து புத்தாண்டு விருந்து அளித்தார். இதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உள்பட அனைத்து வீரர்களும், அணி நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

ஆஸ்திரேலிய பிரதமர், Indian Team
ஆஸ்திரேலிய பிரதமர் உடன் இந்திய அணி வீரர்கள். (BCCI)


ரோகித் சர்மா தனது குழந்தையைப் பார்க்க தாய்நாடு சென்றதால் அவர் பங்கேற்கவில்லை. ஆஸ்திரேலிய அணி வீரர்கள் தங்களது பாரம்பரிய நீலநிற டி- ஷர்ட் அணிந்து வந்திருந்தனர். இந்திய அணி வீரர்கள் வெள்ளைச் சட்டை மற்றும் நீல நிற பேண்ட் உடன் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டும் அணிந்திருந்தனர்.
ஆஸ்திரேலிய பிரதமர், Indian Team
ஆஸ்திரேலிய அணி வீரர்கள் தங்களது பாரம்பரிய நீலநிற டி- ஷர்ட் அணிந்து வந்திருந்தனர். (BCCI)


விருந்தின்போது இந்திய வீரர்கள், ஆஸ்திரேலிய பிரதமரிடம் ஒருவர் பின் ஒருவராக தங்களை அறிமுகம் செய்துகொண்டனர். அப்போது, ரிஷப் பண்ட் வந்ததும், “நீங்க தானே மைதானத்தில் வீரர்களை வம்புக்கு இழுத்தீங்க. உங்களை மிகவும் வரவேற்கிறேம். நாங்கள் போட்டி மனப்பான்மை உள்ள விளையாட்டை விரும்புகிறோம்” என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் சிரித்துக்கொண்டே கூறினார்.



ஆஸ்திரேலிய பிரதமர் உடன் ரிஷப் பண்ட் உரையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

Also Watch...

First published: January 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading