VIDEO | நரைனின் மான்கட் முயற்சியை முறியடித்த கோலி!

#ViratKohli’s animated take on #SunilNarine's #Mankad attempt | மான்கட் அவுட் முறையில் கோலி அவுட்டாகியிருந்தால், சதம் அடிக்க முடியாமல் போயிருக்கும்.

news18
Updated: April 20, 2019, 1:48 PM IST
VIDEO | நரைனின் மான்கட் முயற்சியை முறியடித்த கோலி!
மான்கட் அவுட் முயற்சியை தடுத்த கோலி. (BCCI)
news18
Updated: April 20, 2019, 1:48 PM IST
கொல்கத்தாவில் நேற்று நடந்த ஐ.பி.எல் போட்டியில், மான்கட் அவுட் செய்ய வந்த சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைனை, விராட் கோலி கிண்டல் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

நடப்பு ஐ.பி.எல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜோஸ் பட்லரை மான்கட் அவுட் செய்த நிகழ்வு சர்வதேச அளவில் விவாதத்துக்கு ஆளானது.

இதேபோன்ற சம்பவம் நடக்காமல் விராட் கோலி சாமர்த்தியமாக தடுத்துள்ளார். கொல்கத்தாவில் நேற்று நடந்த போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.


RCB Team, BCCI
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. (BCCI)


முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, கோலியின் அதிரடி சதத்தால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

பெங்களூரு அணியின் பேட்டிங்கின்போது, 18-வது ஓவரை சுனில் நரைன் வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தை ஸ்டோய்னிஸ் எதிர்கொள்ள மறுமுனையில் கோலி இருந்தார். பந்தை வீச வந்த நரைன், கோலி கிரீஸை விட்டு வெளியே சென்றுவிடுவார் மான்கட் அவுட் செய்துவிடலாம் என நினைத்தார். ஆனால், கோலி சாமர்த்தியமாக அதை முறியடித்தார்.

Loading...



அந்த ஓவரில் கோலி அவுட்டாகியிருந்தால், சதம் அடிக்க முடியாமல் போயிருக்கும். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Also Watch...










தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: April 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...