டீம் இந்தியா பேட்டிங் ஜாம்பவான் விராட் கோலி, ரசிகர்களின் புகைப்படம் அல்லது ஆட்டோகிராஃப் கோரிக்கையை ஒருபோதும் தவறவிடமாட்டார். மொஹாலியில் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முடிவில், நெஞ்சை உருக்கும் சைகை மூலம் மில்லியன் கணக்கான கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களை வென்றார்.
அணி பேருந்தில் ஏறுவதற்கு சற்று முன்பு, கோலி ஒரு மாற்றுத் திறனாளி ரசிகரை நோக்கி நடந்து சென்று, அவரது முதுகைத் தட்டிக் கொடுத்து ஜெர்சி ஒன்றை அவருக்கு பரிசாக வழங்கினார். ரசிகரான தர்மவீர் சமூக ஊடகங்களில் வீடியோவைப் பகிர்ந்துள்ளார், இது வைரலாகி வருகிறது.
ஒவ்வொரு ஆட்டத்திற்கும் வரும் இந்திய அணியின் தீவிர ரசிகரான தரம்வீர், வீடியோவைப் பகிரும் போது, "ஆஹா இது எனது வாழ்க்கையின் சிறந்த நாள் @imVkohli அவரது 100வது டெஸ்ட் போட்டி அவர் எனக்கு டி-ஷர்ட்களை பரிசாக அளித்தார் வாவ் 😲 #viratkholi #ViratKohli100thTest #KingKohli." என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
தரம்வீர் பகிர்ந்துள்ள வீடியோ:
Wow it's great day my life @imVkohli he's 100th test match he's gifts me t shirts wow 😲 #viratkholi #ViratKohli100thTest #KingKohli pic.twitter.com/mxALApy89H
— dharamofficialcricket (@dharmveerpal) March 6, 2022
இதற்கிடையில், இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டத்தில் கோலி ஒரு மகத்தான சாதனையை எட்டினார், இது டெஸ்ட் போட்டிகளில் தேசிய அணிக்காக அவரது 100 வது டெஸ்ட் தோற்றம் ஆகும். சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சுனில் கவாஸ்கர், விவிஎஸ் லட்சுமண், அனில் கும்ப்ளே, சவுரவ் கங்குலி, கபில்தேவ், திலீப் வெங்க்சர்கர், வீரேந்திர சேவாக், ஹர்பஜன் சிங், இஷாந்த் சர்மா போன்றோருடன் இணைந்த 12வது இந்திய வீரர் என்ற பெருமையை கோலி பெற்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: India vs srilanka, Virat Kohli