Home /News /sports /

VIDEO: நீங்க அடுத்த தோனியா? அழகான ரன் அவுட்டை கோட்டை விட்ட ரிஷப்... கடுப்பான கோலி!

VIDEO: நீங்க அடுத்த தோனியா? அழகான ரன் அவுட்டை கோட்டை விட்ட ரிஷப்... கடுப்பான கோலி!

ரன்அவுட்டை கோட்டைவிட்ட ரிஷப் பண்ட். (Twitter)

ரன்அவுட்டை கோட்டைவிட்ட ரிஷப் பண்ட். (Twitter)

#RishabhPant concedes single after failing to pull off #Dhoni-esque #stumping | ஆஸ்திரேலிய அணி, 47.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 359 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  • News18
  • Last Updated :
    தோனியைப் போல் ரன் அவுட் செய்ய முயற்சித்து அழகான ரன்அவுட்டை ரிஷப் பண்ட் கோட்டைவிட்டதால் கேப்டன் கோலி கடும் கோபமடைந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மொஹாலியில் நேற்று (மார்ச் 11) நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 358 ரன்கள் குவித்தது.

    இதனை அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 47.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 359 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இவ்வளவு பெரிய இலக்கு நிர்ணயித்து இந்திய அணி தோல்வி அடைந்ததால் கிரிக்கெட் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.



    இந்திய கிரிக்கெட் அணியின் பீல்டிங் மற்றும் பவுலிங் மிகவும் மோசமாக இருந்தது. குறிப்பாக, விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் நிறைய பந்துகளை கோட்டைவிட்டார். போட்டியின் சாஹல் வீசிய 44-வது ஓவரை ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் கேரி எதிர்கொண்டார்.

    அந்த ஓவரில், அலெக்ஸ் பேட்டில் பட்ட பந்து ஸ்டம்புக்கு அருகே லெக் சைடு சென்றது. உடனே பந்தை எடுத்த ரிஷப் பண்ட், ஸ்டம்பை பார்க்காமல் தோனி ஸ்டைலில் ரன் அவுட் செய்ய முயற்சித்தார். ஆனால், பந்து ஸ்டம்பில் படவில்லை. இதனால், கேப்டன் கோலி கோபம் அடைந்தார்.











    இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    கொலையை விட மேட்ச் பிக்சிங் பெரிய குற்றம் - தோனி

    Also Watch...

    Published by:Murugesan L
    First published:

    Tags: Cricket, India vs Australia, Rishabh pant

    அடுத்த செய்தி