ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

WATCH - கோலிக்கு என்ன ஆச்சு? பேட்டிங்கின் போது நெஞ்சை பிடித்து நின்ற விராட்! வைரல் வீடியோ

WATCH - கோலிக்கு என்ன ஆச்சு? பேட்டிங்கின் போது நெஞ்சை பிடித்து நின்ற விராட்! வைரல் வீடியோ

ஜிம்பாவே போட்டியில் விராட் கோலி ( Source - Screengrab)

ஜிம்பாவே போட்டியில் விராட் கோலி ( Source - Screengrab)

இந்திய ஜிம்பாவே போட்டியில் வீராட் கோலி நெஞ்சில் கைவைத்து மூச்சு வாங்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகிவருகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • inter, IndiaMelbourne Melbourne

  2022 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற குரூப் பிரிவு ஆட்டத்தில் இந்திய அணி ஜிம்பாவே அணியை எதிர்கொண்டது. இதில் இந்தியா 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்த நிலையில், நட்சத்திர வீரர் விராட் கோலி 26 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இந்திய அணி 7 ஓவரில் பேட் செய்த போது களத்தில் கோலியும், ராகுலும் இருந்தனர். அப்போது முதல் பந்தை விராட் கோலி கவரில் அடித்து வேகமாக ஓடி இரண்டு ரன்கள் எடுத்தார்.

  அடுத்த பந்தையும் அவ்வாறு அடித்து மீண்டும் இரண்டு ரன்கள் ஓடி எடுத்த கோலி, கிரீசுக்கு வந்த சிறிது நேரம் மூச்சை ஆழமாக இழுத்து விட்டு ஆசுவாச படுத்தினார். எதிர்முனையில் இருக்கும் அம்பையர், ராகுல், பந்து வீச்சாளர்கள் ஆகியோருக்கு புரியும்படி நெஞ்சை தொட்டு காண்பித்து மூச்சு வாங்குகிறது, கொஞ்சம் கேப் கொடுங்கள் என்று சிக்னல் கொடுத்தார்.

  இந்த நிகழ்வு ரசிகர்கள் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி கவனத்தை பெற்றது.பொதுவாகவே சர்வதேச கிரிக்கெட்டில் மிக பிட்டான வீரராக கருதப்படுபவர் கோலி. குறிப்பாக வேகமாக ஓடுவது, குயிக் சிங்கிள், இரண்டு அல்லது மூன்று ரன்களை சளைக்காமல் ஓடும் திறன் கொண்டவர் விராட். அப்படி இருக்க அவருக்கு நேற்று மூச்சு வாங்கியது ஏன். ஏதேனும் பிட்னஸ் பிரச்னையா அல்லது வயதாகி விட்டதால் முன்பிருந்த பிட்னஸ் இல்லையா என ரசிகர்களுக்கு தோன்றும்படி அந்த காட்சி இருந்தது. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

  இதையும் படிங்க: தோனி அனுப்பிய அந்த மெசேஜ்.. மஹியின் நட்பு குறித்து உருக்கமாக பேசிய விராட் கோலி!

  இருப்பினும் வேகமாக ஓடும்போது மூச்சிரைப்பது இயல்பான ஒன்று தான். கோலிக்கு பிட்னஸ் பிரச்னை இருப்பதாக எந்த அதிகாரப்பூர்வ செய்தியும் இதுவரை இல்லை. கடந்த சில நாள்களுக்கு முன்னர் தான் தனது 34ஆவது பிறந்தநாளை விராட் கோலி கொண்டாடினார். வரும் 10ஆம் தேதி நடைபெறும் அரையிறுதி போட்டியில் இந்தியா அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. மற்றொரு அரையிறுதியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

  Published by:Kannan V
  First published:

  Tags: ICC world cup, T20 World Cup, Viral Video, Virat Kohli