பார்த்திருக்கீங்களா கோலியின் கூக்ளி பந்துவீச்சு? - (வீடியோ)

#ViratKohli Bowls In #IndvAusXI Match At #Sydney | நீண்ட நாட்களுக்குப்பின் கோலி பந்துவீசியதால், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.

பார்த்திருக்கீங்களா கோலியின் கூக்ளி பந்துவீச்சு? - (வீடியோ)
பந்துவீச தயாராகும் கோலி (CricketAustralia)
  • News18
  • Last Updated: November 30, 2018, 5:35 PM IST
  • Share this:
ஆஸ்திரேலிய லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் நம்பர் ஒன் வீரராக வலம் வருகிறார். கோலியின் ரன் குவிப்பை பார்த்து வியந்த கிரிக்கெட் ரசிகர்கள், அவரை ‘ரன் மெஷின்’ என்று அழைக்கின்றனர். பல போட்டிகளில் தனது சிறப்பான பேட்டிங்கின் மூலம் அணியை வெற்றி பெற வைத்துள்ளார். இதேபோல், பந்துவீச்சிலும் கோலி, சில கூக்ளி ஓவர்களை வீசியுள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலிய லெவன் அணிகள் இடையிலான பயிற்சி ஆட்டம் சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய லெவன் அணியின் கேப்டன் சாம் வொயிட்மேன் முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணியில், தொடக்கவீரர் கே.எல். ராகுல் 3 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். மற்றொரு தொடக்க வீரர் பிரித்வி ஷா (66), புஜாரா (54), கோலி (64), ரகானே (56) மற்றும் விஹாரி (53) ஆகியோர் அரைசதம் அடித்து அசத்தினர்.

ரோஹித் சர்மா தனது பங்கிற்கு 40 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்கள் சேர்த்து ஆல் அவுட்டானது. பின்னர், முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய லெவன் அணிக்கு டி ஆர்கி ஷார்ட் மற்றும் மேக்ஸ் பிரையாண்ட் ஆகியோர் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். நிதானமாக விளையாடிய முதல் விக்கெட்டிற்கு 114 ரன்கள் சேர்த்தது. மேக்ஸ் பிரையாண்ட் 62 ரன்களிலும், டி ஆர்கி ஷார்ட் 74 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 3-ம் நாள் ஆட்டம் முடிவில் ஆஸ்திரேலிய லெவன் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் பந்துவீச்சை எளிதில் சமாளித்தனர். வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால், இந்திய பந்துவீச்சு எடுபடவில்லை. அதனால், வேறு வழியில்லாத விராட் கோலி, தானே பந்துவீச களமிறங்கினார். 3-ம் நாள் ஆட்டத்தின் 87 மற்றும் 89-வது ஆகிய 2 ஓவர்களை கோலி வீசினார். ஆனால், அவரின் பந்துவீச்சில் விக்கெட் எதுவும் எடுக்கவில்லை.கோலி, பந்துவீசுவது புதிய நிகழ்வு இல்லை. ஏற்கனவே, அவர் சில போட்டிகளில் பந்துவீசியுள்ளார். இருப்பினும், நீண்ட நாட்களுக்குப்பின் கோலி பந்துவீசியதால், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். கோலி பந்துவீசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Also Watch...

First published: November 30, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்