முகப்பு /செய்தி /விளையாட்டு / VIDEO | ரிஷப் பண்ட் காட்டடியால் கதறி அழுத ஹைதராபாத் பயிற்சியாளர்!

VIDEO | ரிஷப் பண்ட் காட்டடியால் கதறி அழுத ஹைதராபாத் பயிற்சியாளர்!

டாம் மூடி - ரிஷப் பண்ட்.

டாம் மூடி - ரிஷப் பண்ட்.

#TomMoody Cries Profusely After #SunrisersHyderabad’s Loss | டெல்லி அணி கடைசி ஓவரில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

ஐ.பி.எல் எலிமினேட்டர் போட்டியில் டெல்லி அணியின் ரிஷப் பண்ட் ருத்ரதாண்டவத்தைப் பார்த்து எதிரணி பயிற்சியாளர் டாம் மூடி கண்ணீர்விட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

12-வது சீசன் ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லீக் ஆட்டங்கள் முடிந்த நிலையில் தற்போது ப்ளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் (குவாலிஃபையர் 1) மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இதனை அடுத்து, விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த எலிமினேட்டர் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டெல்லி அணி கடைசி ஓவரில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

பரபரப்பான போட்டியில் டெல்லி அணியில் இளம் அதிரடி பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் 21 பந்துகளில் 49 ரன்கள் விளாசினார். குறிப்பாக, கடைசி 3 ஓவர்களில் டெல்லி அணியின் வெற்றிக்கு 34 ரன்கள் தேவைப்பட்டது. பசில் தம்பி வீசிய 18-வது ஓவரின் முதல் நான்கு பந்துகளில் 4, 6, 4, 6 என ரிஷப் பண்ட் அடித்து நொறுக்கினார்.

Rishabh Pant, ரிஷப் பண்ட்
அதிரடி காட்டிய ரிஷப் பண்ட். (DC)

இறுதியில், ஹைதராபாத் அணி தோல்வி அடைந்ததும், அதன் பயிற்சியாளர் டாம் மூடி கண்கலங்கினார். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

VIDEO | அதிசய முறையில் அவுட்டான டெல்லி கேப்பிடல்ஸ் வீரர் அமித் மிஸ்ரா!

இரண்டே நிமிடத்தில் விற்றுத்தீர்ந்த ஐ.பி.எல் பைனல் டிக்கெட்!

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரிஷப் பண்ட் ஏன் இல்லை? பாலிவுட் நடிகர் கேள்வி!

Also Watch...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


First published:

Tags: IPL 2019, Rishabh pant