விநோதமாக விளையாடி இங்கிலாந்து பவுலர்களை கடுப்பேற்றிய ஸ்டிவ் ஸ்மித் - வீடியோ

Web Desk | news18-tamil
Updated: August 17, 2019, 4:46 PM IST
விநோதமாக விளையாடி இங்கிலாந்து பவுலர்களை கடுப்பேற்றிய ஸ்டிவ் ஸ்மித் - வீடியோ
ஸ்டிவ் ஸ்மித்
Web Desk | news18-tamil
Updated: August 17, 2019, 4:46 PM IST
ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணிக்கு பெரிய சவாலாக ஸ்டிவ் ஸ்மித் இருந்து வருகிறார். 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து பந்துவீச்சை வித்தியாசமாக அவர் கையாண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பாரம்பரியமான ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்மித் 2 இன்னிங்சிலும் சதமடித்து அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித், வார்னர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஓராண்டு தடைவிதிக்கப்பட்டது. ஓராண்டு தடைக்ககு பின்னர் களமிறங்கிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டையும் பெற்றார் ஸ்மித்.
ஆஷஸ் தொடரின் 2வது டெஸ்ட் போட்டியிலும் இவரது ஆதிக்கம் தொடர்ந்து வருகிறது. 2வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 258 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 3வது நாள் ஆட்டநேர முடிவில் 80 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து உள்ளது. ஸ்டிவ் ஸ்மித் அவுட்டாகாமல் தொடர்ந்து களத்தில் இருந்து வருகிறார். இங்கிலாந்து பந்துவீச்சை ஸ்மித் வித்தியாசமான முறையில் எதிர்கொண்டது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Loading...
ஸ்மித் இங்கிலாந்து பவுலர்கள் வீசும் பந்தை பேட்டில் தொடாமல் பேட்டை உயர்த்தி, உயர்த்தி வித்தியாசமான போஸ் கொடுப்பார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Also Watch

First published: August 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...