Home /News /sports /

மைதானத்திற்குள் நுழைந்த பாம்பு... கிரிக்கெட் போட்டியில் பரபரப்பு...! வீடியோ

மைதானத்திற்குள் நுழைந்த பாம்பு... கிரிக்கெட் போட்டியில் பரபரப்பு...! வீடியோ

மழை, மோசமான வானிலை காரணமாக கிரிக்கெட் போட்டிகள் தாமதமாகி பார்த்திருப்போம். ஆனால் ராஞ்சி தொடருக்கான போட்டியில் மைதானத்தில் பாம்பு நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ராஞ்சி தொடருக்கான போட்டியில் ஆந்திரபிரதேசம் - விதர்பா அணிகள் மோதின. இந்த போட்டி விஜயவாடா மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த போட்டி தொடங்குவதற்கு முன் நடுவர்கள் மைதானத்தில் நடுவே வந்த போது அதிர்ச்சியடைந்தனர். மைதானத்தில் பாம்பு இருப்பது தெரியவந்தது.



மைதானத்திலிருந்து பாம்பை வெளியேற்ற வீரர்கள் முயற்சித்தனர். இதனால் போட்டி தொடங்க தாமதமானது. இறுதியாக பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டு போட்டி தொடங்கியது.

விஜயவாடா மைதானத்தில் பாம்பு உள்ளே நுழைந்ததால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. மைதானத்தில் பாம்பு நுழைந்தது வீரர்களின் பாதுகாப்பையும் கேள்விகுறியாக்கி உள்ளது.
Published by:Vijay R
First published:

Tags: Ranji Trophy

அடுத்த செய்தி