தவானுக்குள் இப்படியும் ஒரு திறமையா! மெய்சிலிர்க்க வைத்த வீடியோ

ஷிகார் தவான் கடந்த 4 வருடமாக புல்லாங்குழல் இசைக்க பயிற்சி எடுத்து கொண்டு வந்துள்ளார்.

Vijay R | news18-tamil
Updated: September 3, 2019, 9:24 PM IST
தவானுக்குள் இப்படியும் ஒரு திறமையா! மெய்சிலிர்க்க வைத்த வீடியோ
ஷிகார் தவான்
Vijay R | news18-tamil
Updated: September 3, 2019, 9:24 PM IST
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகார் தவான் கிரிக்கெட்டை தாண்டிய தனக்குள் இருக்கும் இசை திறமையை வீடியோவாக பதிவிட்டுள்ளார்.

இந்திய வீரர் ஷிகார் தவான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புல்லாங்குழல் இசைக்கும் வீடியோ ஒன்றை பதிவுசெய்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அதற்கு காரணம் ஒரு கைதேர்ந்த இசை கலைஞரை போல் ஷிகார் தவான் புல்லாங்குழலை இசைக்கிறார். ஒரு புதிய தொடக்கம்... மரம், காற்று, கடல் மத்தியில் இசை என்று அந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.





 

Loading...





View this post on Instagram




 

A fresh start.. Trees, the wind, the ocean & some music = bliss. 🎶


A post shared by Shikhar Dhawan (@shikhardofficial) on






ஷிகார் தவான் கடந்த 4 வருடமாக புல்லாங்குழல் இசைக்க பயிற்சி எடுத்து கொண்டு வந்துள்ளார். 2018-ல் தனது ட்விட்டர் பக்கத்தில் ''எனக்கு பிடித்தமான இசைக்கருவி புல்லாங்குழல் இசைக்க எடுக்க பயிற்சி எடுத்து வருகிறேன் எனது குரு வேணுகோபால்'' என்று பதிவிட்டிருந்தார்.



மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் ஷிகார் தவான் இந்திய அணியில் விளையாடவில்லை. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 போட்டியில் அவர் களமிறங்க உள்ளார். முதல் டி20 போட்டி செப்டம்பர் 15-ம் தேதி தர்மசாலாவில் தொடங்க உள்ளது.

Also Watch

First published: September 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...