மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியிடம் சகவீரர் ஷர்துல் தாகூர் மன்னிப்பு கேட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் களைகட்டி வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இந்தப் போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால், சென்னை அணியின் தொடர் வெற்றி முடிவுக்கு வந்தது. அத்துடன், புள்ளிப்பட்டிலில் முதலிடத்தில் இருந்து பின்னுக்குத் தள்ளப்பட்டது.
மும்பை அணியின் பேட்டிங்கின்போது, 8-வது ஓவரை சென்னை அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜா வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட யுவராஜ் சிங் பாயிண்ட் திசையில் அடிக்க, அங்கு ஃபீல்டிங் செய்த ஷர்துல் தாகூர் பந்தை தவறவிட்டார்.
அத்துடன், விக்கெட் கீப்பர் தோனிக்கு நேராக பந்தை எறியாமல் தூரமாக வீசினார். இதனால், மேலும் ஒரு ரன் ஓட எதிரணி பேட்ஸ்மேன்கள் முயற்சித்தனர். இதனால், சற்று முறைத்து பார்த்த தோனியிடம், ஷர்துல் தாகூர் கையெடுத்துக் கும்பிட்டு மன்னிப்பு கேட்டு சமாதானப்படுத்தினார்.
காத்திருந்த மும்பை பாட்டி... நேரில் சென்று பார்த்த தல தோனி... வைரலாகும் புகைப்படங்கள்!
VIDEO: கேட்ச் பிடிக்காமல் ரிவியூவ் கேட்ட பாக். வீரர்... கலாய்த்த ரசிகர்கள்!
தோல்வியின்றி வரலாறா... மோதி எழுவோம்... ஹர்பஜன் சிங் ஆவேசம்!
VIDEO: தோனிக்கே மான்கட் அவுட்டா? பல்பு வாங்கிய பாண்டியா!
Also Watch...
இரட்டைப் பதவி ஆதாயம்: சவுரவ் கங்குலிக்கு பிசிசிஐ நோட்டீஸ்!
தொடக்கவீரர்கள் சொதப்பல்! மும்பையிடம் வீழ்ந்தது சென்னை..
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CSK, IPL 2019, MS Dhoni, Shardul thakur