• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ஆதரவற்ற குழந்தைகளுக்காக கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறிய சச்சின்! வீடியோ

ஆதரவற்ற குழந்தைகளுக்காக கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறிய சச்சின்! வீடியோ

கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் சச்சின் டெண்டுல்கர். (Twitter)

கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் சச்சின் டெண்டுல்கர். (Twitter)

Sachin Tendulkar turns Santa Claus | இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து கொண்டாடினார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு சச்சின் டெண்டுல்கர் ‘சான்டா க்ளாஸ்’ வேடமிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் கொடுத்து மகிழ்வித்தார்.

    ஒவ்வொரு ஆண்டும் இயேசு கிறிஸ்து பிறந்தநாளான டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று (25.12.18) பல்வேறு பிரபலங்கள், தலைவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

    Merry Christmas

    இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து கொண்டாடினார். சச்சின், கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு, ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்குச் சென்றார். அங்குள்ள குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாடினார்.

    சச்சின் டெண்டுல்கர், Sachin Tendulkar
    குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாடிய சச்சின் டெண்டுல்கர். (Twitter)


    பின்னர், குழந்தைகளுடன் நடனமாடி அவர்களை சச்சின் உற்சாகப்படுத்தினார். இறுதியாக, குழந்தைகளுக்கு தான் கொண்டுவந்த பரிசுப் பொருட்களை கொடுத்து மகிழ்வித்தார்.



    இந்த வீடியோவை சச்சி டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    Also Watch...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesan L
    First published: