சச்சின் டெண்டுல்கர் மும்பையின் 15 வயதுக்குட்பட்டோர் அணியில் முதன் முதலாக ஆடிய போது ரன் அவுட் ஆகி மைதானத்திலிருந்து பெவிலியன் வரை அழுது கொண்டே வந்ததாக வீடியோ ஒன்றில் தெரிவித்தார். அதே 17ம் தேதி சச்சின் புனேயின் பிஒய்சி ஜிம்கானா மைதானத்தில் தான் முதன் முதலில் களமிறங்கியது, மைதானத்தின் அமைப்பு என்று விளக்கி ஒரு வீடியோவையும் தன் சமூக ஊடகப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தன் முதல் போட்டியில் மும்பை யு-15 அணிக்காக 4 ரன்களையே அடித்தார் சச்சின். ஆனால் அந்தத் தருணம் இன்று வரை சச்சின் மனநிலையில் ஆழமாக படிந்துள்ளது. இந்த வீடியோவில் தான் எப்படி ரன் அவுட் ஆனேன் என்பதையும் தான் அப்போது வேகமாக ஓடக்கூடியவனல்ல என்பதையும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார் சச்சின்.
கிரிக்கெட் ஆடும் எந்த ஒருவருக்கும் அவர் ஆடிய மைதானம், முதல் மைதானம் மலரும் நினைவுகளைக் கிளப்பக் கூடியது, சச்சினும் தன் வீடியோவில் ‘Nostalgic moment in Pune at PYC Gymkhana’ என்று தலைப்பிட்டுள்ளார், சச்சின் ட்விட்டர் வீடியோ இதோ:
Nostalgic moment in Pune at PYC Gymkhana. pic.twitter.com/GYRBk6RBQk
— Sachin Tendulkar (@sachin_rt) August 17, 2022
தான் ரன் அவுட் ஆனதை விவரித்த சச்சின், “நான் எதிர்முனையில் நின்று கொண்டிருந்தேன். என் பள்ளித்தோழன் ராகுல் கன்புலே ஒரு ஷாட்டை ஆடினான். அது ஆஃப் ட்ரைவ், என்னை 3வது ரன்னுக்காக அவன் அழைத்தான், நான் அப்போது வேகமாக ஓடக்கூடியவன் அல்ல. அசம்பாவிதமாக நான் ரன் அவுட் ஆனேன். நான் 4 ரன்களைத்தான் அடித்திருந்தேன்.
எனக்கு இன்னும் பசுமையாக நினைவில் உள்ளது, முதல் போட்டி ரன் அவுட் ஆகி பெவிலியன் வரும் வரை அழுதுக் கொண்டே வந்தேன். முதல் போட்டியில் இப்படி ஆகிவிட்டதே என்று கடும் ஏமாற்றமடைந்தேன். இன்று 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மைதானத்தில் நிற்கிறேன், கொஞ்சம் உணர்ச்சிகரமாகத்தான் இருக்கிறது.
சச்சினின் இந்த வீடியோ பதிவிட்டவுடன் வைரலானது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Sachin tendulkar, Viral Video