• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • உயிரிழந்த சி.ஆர்.பி.எப் வீரர்கள் குடும்பங்களுக்கு சச்சின் செய்த உதவி!

உயிரிழந்த சி.ஆர்.பி.எப் வீரர்கள் குடும்பங்களுக்கு சச்சின் செய்த உதவி!

புஷ்-அப்ஸ் எடுத்த சச்சின் டெண்டுல்கர். (PTI)

புஷ்-அப்ஸ் எடுத்த சச்சின் டெண்டுல்கர். (PTI)

#SachinTendulkar does push-ups to raise Rs.15 lakh for families of #Pulwamamartyrs | விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த துணை ராணுவத்தினரின் குடும்பங்களுக்காக சுமார் ரூ.15 லட்சம் நிதி திரட்டும் நிகழ்ச்சியில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கலந்துகொண்டார்.

    ஜம்மூ காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் ராணுவத்தினர் உயிரிழந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    உயிரிழந்த ராணுவத்தினருக்கு மத்திய அரசு மற்றும் அந்தந்த மாநில அரசுகள் நிவாரணத் தொகை வழங்கின. இதுதவிர, பிற தன்னார்வலர்களும் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றனர். விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

    pulwama jawans, சி.ஆர்.பி.எப் வீரர்களின் உடல்கள்
    உயிரிழந்த வீரர்களின் உடல்களுக்கு மரியாதை.


    இந்நிலையில், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த துணை ராணுவத்தினரின் குடும்பங்களுக்காக சுமார் ரூ.15 லட்சம் நிதி திரட்டும் மாரத்தான் தொடர் ஓட்டம் டெல்லியில் நேற்று (பிப்.24) நடைபெற்றது. இதில், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கலந்துகொண்டார்.

    இந்த மாரத்தான் தொடர் ஓட்டத்தை சச்சின் டெண்டுல்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாரத்தான் தொடங்குவதற்கு முன், ஏராளமான மாரத்தான் வீரர்கள் முன்னிலையில் மேடையிலேயே சச்சின், 10 புஷ்-அப்ஸ் எடுத்தார்.




    அவரைப் பார்த்து, அனைத்து மாரத்தான் வீரர்களும் புஷ்-அப்ஸ் எடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

    VIDEO: ரோகித் சர்மாவை அலட்சியம் செய்த பும்ரா, கோலி? தோல்வியில் முடிந்த போட்டி!

    Also Watch...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesan L
    First published: