VIDEO: ரசலின் காப்பி பேஸ்ட் சிக்ஸ்

கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை எடுத்தது.

news18
Updated: April 14, 2019, 12:03 PM IST
VIDEO: ரசலின் காப்பி பேஸ்ட் சிக்ஸ்
ஐபிஎல்
news18
Updated: April 14, 2019, 12:03 PM IST
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணியின் ரசூல் 21 பந்துகளில் 45 ரன்களை விளாசினார்.

டெல்லி - கொல்கத்தா அணிகள் மோதும் லீக் போட்டி ஈடென் கார்டென் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது டெல்லி அணி.

பேட்டிங்கை தொடங்கிய கொல்கத்தா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் டென்லி முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து வெளியேறினர். எனினும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கில் நிதானமாக விளையாடி 65 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதையடுத்து களமிறங்கிய ரசல் அதிரடியாக விளையாடி 21 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்ஸர்களை விளாசி 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 17.1, 17.3 ஓவரில் ரசல் இரண்டு சிக்ஸர்களை விளாசினார். இந்த இரண்டு சிக்ஸர்களையும் ஒரே மாதிரி அடித்தார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கிறிஸ் மோரிஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.



இறுதியாக கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை எடுத்தது. 

டெல்லி அணி சார்பில் ரபாடா, கிறிஸ் மோரிஸ், கீமோ பால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், இஷாந்த சர்மா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Also watch


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: April 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...