VIDEO: பேட்டை நழுவவிட்டு அவுட்டான ரோகித் சர்மா!

#RohitSharma Gets Stumping by #AlexCarey | ரோகித் சர்மா அவுட்டான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #INDvAUS

VIDEO: பேட்டை நழுவவிட்டு அவுட்டான ரோகித் சர்மா!
பேட்டை நழுவவிட்ட ரோகித் சர்மா. (Twitter)
  • News18
  • Last Updated: March 13, 2019, 8:37 PM IST
  • Share this:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா பேட்டை நழுவவிட்டதால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார்.

டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வரும் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக, கவாஜா 100 ரன்களும், ஹேண்ட்ஸ்கோம்ப் 52 ரன்களும் எடுத்தனர்.


Usman Khawaja, கவாஜா,
சதம் அடித்த கவாஜா. (BCCI)


273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஒரு புறம் ரோகித் சர்மா பொறுமையாக விளையாட, மறுபுறம் ஷிகர் தவான் (12), விராட் கோலி (20), ரிஷப் பண்ட் (16), விஜய் சங்கர் (16) ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர்.

நிதானமாக விளையாடிய ரோகித் சர்மா (56) அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். ஆடம் ஸாம்பா வீசிய 29-வது ஓவரின் 2-வது பந்தை இறங்கி வந்து அடிக்க ரோகித் முயற்சித்தார். ஆனால், பந்தை அடிக்க பேட்டை சுழற்றியபோது, கையைவிட்டு நழுவிச்சென்ற பேட் அந்தரத்தில் பறந்து தூரத்தில் விழுந்தது.

Loading...

உடனே கிரீஸ்-க்கு வருவதற்குள் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி ஸ்டம்பிங் செய்தார். இதனால், ரோகித் சர்மா ஆட்டமிழந்து பரிதாபமாக வெளியேறினார்.





இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Also Watch...

First published: March 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...