நியூசிலாந்துக்கு எதிரான டி-20 தொடருக்குத் தயாராகும் வகையில் இளம் வீரர் ரிஷப் பண்ட் வலைப்பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 2 விதமான தொடர்களில் விளையாடி வருகிறது. நேற்று முன் தினம் (பிப்.3) முடிந்த ஒரு நாள் தொடரை 4-1 என இந்திய அணி கைப்பற்றியது. இதன்மூலம், 10 ஆண்டுகளுக்குப்பின், நியூசிலாந்து மண்ணில் ஒரு நாள் தொடரை வென்று இந்தியா சாதித்தது.

ஒரு நாள் தொடருக்கான கோப்பை உடன் இந்திய அணி. (BCCI)
இதனை அடுத்து, இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் நாளை (பிப்.6) முதல் வரும் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனையொட்டி, வெல்லிங்டன் மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

வலைப்பயிற்சியில் மகேந்திர சிங் தோனி. (BCCI)
விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், ஆல் ரவுண்டர் கேதர் ஜாதவ், சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் உள்ளிட்ட வீரர்கள் வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். அதேபோல், 5-வது ஒரு நாள் போட்டியில் ஒரு ரன்னில் ஆட்டமிழந்த தோனி, பேட்டிங்கில் கவனம் செலுத்தினார்.
இதில், இளம் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். இந்த வீடியோவை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
முன்னதாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 350 ரன்கள் விளாசி, அதிகபட்ச ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 2-வது இடத்தை ரிஷப் பண்ட் பிடித்தார். ஒரு நாள் தொடரில் தோனி வருகையால் ஓய்வளிக்கப்பட்ட பண்ட் டி-20 தொடரில் இடம்பெறுவார் என தெரிகிறது.
பாகிஸ்தானின் உலக சாதனையை விரட்டும் இந்தியா!
Also Watch...
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.