VIDEO | கேப்டனின் முடிவை எதிர்த்த ரிஷப் பண்ட்... அவர் செய்தது சரியா? தவறா? ரசிகர்கள் குழப்பம்!

#RishabhPant insists #DeepakHooda should be given out | தீபக் ஹூடா ரன் எடுக்க ஓடியபோது எதிர்பாராதவிதமாக பந்துவீச்சாளர் கீமோ பால் மீது மோதி பாதியிலேயே கீழே விழுந்தார்.

VIDEO | கேப்டனின் முடிவை எதிர்த்த ரிஷப் பண்ட்... அவர் செய்தது சரியா? தவறா? ரசிகர்கள் குழப்பம்!
#RishabhPant insists #DeepakHooda should be given out | தீபக் ஹூடா ரன் எடுக்க ஓடியபோது எதிர்பாராதவிதமாக பந்துவீச்சாளர் கீமோ பால் மீது மோதி பாதியிலேயே கீழே விழுந்தார்.
  • News18
  • Last Updated: May 9, 2019, 6:50 PM IST
  • Share this:
ஹைதராபாத் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரின் முடிவுக்கு ரிஷப் பண்ட் எதிர்ப்பு தெரிவித்ததால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

12-வது சீசன் ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லீக் ஆட்டங்கள் முடிந்த நிலையில் தற்போது ப்ளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் (குவாலிஃபையர் 1) மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இதனை அடுத்து, விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த எலிமினேட்டர் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டெல்லி அணி கடைசி ஓவரில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.




ஹைதராபாத் அணியின் பேட்டிங்கின்போது கடைசி ஓவரை டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் கீமோ பால் வீசினார். அந்த ஓவரின் 5-வது பந்தை எதிர்கொண்ட தீபக் ஹூடா, பந்தை அடிக்காமல் பைஸ் முறையில் ரன் எடுக்க முயன்றார். உடனே சுதாரித்துக்கொண்ட விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் மறுமுனையில் உள்ள ஸ்டம்பிற்கு பந்தை எறிந்து ரன் அவுட் செய்தார்.

இதற்கிடையே, தீபக் ஹூடா ரன் எடுக்க ஓடியபோது எதிர்பாராதவிதமாக பந்துவீச்சாளர் கீமோ பால் மீது மோதி பாதியிலேயே கீழே விழுந்தார். இதனால், டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் விக்கெட் முறையீட்டை திரும்ப பெறுவதாகவும், தீபக் ஹூடா தொடர்ந்து பேட்டிங் செய்யலாம் எனவும் அம்பயரிடம் தெரிவித்தார். ஆனால், கேப்டனின் முடிவில் தலையிட்ட ரிஷப் பண்ட் இது அவுட்தான் என்று கூறி தீபக் ஹூடாவை வெளியேற்றினார்.



பேட்ஸ்மேன் தீபக் ஹூடா, கீமோ பால் மீது மோதுவதற்கு முன்பே, ரிஷப் பண்ட எறிந்த பந்து இருவரையும் கடந்து சென்றுவிட்டது. அதனாலே ரிஷப் பண்ட், அவுட் வழங்குமாறு அடம்பிடித்து வாங்கியதாக தெரிகிறது.

VIDEO | ரிஷப் பண்ட் காட்டடியால் கதறி அழுத ஹைதராபாத் பயிற்சியாளர்!

VIDEO | அதிசய முறையில் அவுட்டான டெல்லி கேப்பிடல்ஸ் வீரர் அமித் மிஸ்ரா!

இரண்டே நிமிடத்தில் விற்றுத்தீர்ந்த ஐ.பி.எல் பைனல் டிக்கெட்!

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரிஷப் பண்ட் ஏன் இல்லை? பாலிவுட் நடிகர் கேள்வி!

Also Watch...






தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: May 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading