T20 World Cup 2021: ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்னா இதுதான்! நமீபியா அணி ஓய்வறைக்குச் சென்று மனம் திறந்து பாராட்டிய பாகிஸ்தான்
T20 World Cup 2021: ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்னா இதுதான்! நமீபியா அணி ஓய்வறைக்குச் சென்று மனம் திறந்து பாராட்டிய பாகிஸ்தான்
நமீபியா ஓய்வறையில் பாகிஸ்தான் வீரர்கள்.
ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் இப்போதெல்லாம் எங்கோ அரிதாகக் காணக்கிடைக்கிறது, அன்று பாகிஸ்தானுடன் தோற்றாலும் விராட் கோலி மற்றும் வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களை பாராட்டியது தழுவியது ரசிகர்களின் உள்ளங்களை எப்படி அள்ளியதோ அதே போல் நமீபியா அணி தோற்ற பிறகு ஓய்வறயில் இருந்த போது பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் உட்பட அனைவரும் நமீபியா அணி ஓய்வறைக்குச் சென்று அந்த அணியை மனம் திறந்து பாராட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.

பாகிஸ்தான் அணி நமீபியா அணியை 45 ரன்களில் வீழ்த்தி அரையிறுதிக்குச் சென்றது. ஆனால் நமீபியா அணி 144 ரன்கள் எடுத்தது. இந்திய அணி இன்னும் புள்ளிகள் பெறாத நிலையில் ஒரு போட்டியில் வென்று 2 புள்ளிகளை நமீபியா பெற்றது. தகுதிச் சுற்றில் அபாரமாக அயர்லாந்து அணியையெல்லாம் பின்னுக்குத் தள்ளி தகுதிபெற்று ஸ்பிரிட்டெட் ஆக டி20 உலகக்கோப்பையில் ஆடினர். அசோசியேட் அணி என்றால் சும்மா என்பதையெல்லாம் உடைத்தனர்.
இந்நிலையில் நமீபியா அணியை பாகிஸ்தான் அணி ஓய்வறைக்குச் சென்று பாராட்டியது ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டுள்ளது. அதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய ட்விட்டர் கணக்கில் வீடியோவாகப் பதிவிட்டுள்ளனர், அதில், “ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட், பாகிஸ்தான் அணி நமீபியா அணியை அவர்கள் ஓய்வறையில் சந்தித்து டி20 உலகக்கோப்பை பயணத்துக்காக பாராட்டினர். “ என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.
இந்த வீடியோவில் டாப் வீரர்களான ஷாகின் அப்ரீடி, முகமது ஹபீஸ், ஹசன் அலி, பகர் ஜமான், ஷதாப் கான் நமீபியா வீரர்களுக்கு ஊக்கமூட்டும் வகையில் பேசினர். உதவி நிர்வாகி ஒருவரும் நமீபியா வீரர்களைப் பாராட்டியது ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் என்று வலைத்தளங்களில் வைரலாகியது.
Published by:Muthukumar
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.