டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று மதியம் நடைபெறவுள்ளது. இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு நாள்களுக்கு முன்பு நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. அதேபோல் பாகிஸ்தான் அணியும் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்தது.
இந்நிலையில், இறுதிப் போட்டிக்கு முன்னதாக நேற்று பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் மற்றும் அந்த அணியின் மேலாளர் பங்கேற்றனர். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமிடம் நிருபர் ஒருவர் ஐபிஎல் தொடர் பற்றி கேள்வி எழுப்பினார்."ஐபிஎல் தொடரில் விளையாடினால் அந்த அனுபவம் உங்கள் அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும் என நினைக்கிறீர்களா. எதிர்காலத்தில் ஐபிஎல் தொடரில் பங்கேற்போம் என்ற நம்பிக்கை உள்ளதா" என்று அந்த நிருபர் பாபர் அசாமிடம் கேள்வி எழுப்பினார்.
— Guess Karo (@KuchNahiUkhada) November 12, 2022
இந்த கேள்வியை எதிர்பார்க்காத பாபர் அசாம், பதில் ஏதும் கூறாமல் அருகே இருந்த மேலாளரைப் பார்த்தார். உடனடியாக மேலாளர், இப்போது உலகக் கோப்பை இறுதிப்போட்டி குறித்த கேள்விகளுக்கு மட்டும் தான் பதில் அளிக்க வந்துள்ளோம் எனக் கூறி கேள்வியை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க: Pak vs Eng: உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு ஆப்பு வைக்கும் கனமழை.! மெல்போர்னில் மிரட்டும் வானிலை.. ஐசிசி சொல்வது என்ன?
முதல் ஐபிஎல் தொடருக்குப் பின்னர் பாகிஸ்தான் வீரர்களால் ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியவில்லை. 2009ஆம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க இந்தியா தடை விதித்தது.அதேபோல், இந்த சம்பவத்திற்குப் பின் இந்திய அணி பாகிஸ்தான் பயணம் மேற்கொண்டு போட்டிகளில் ஏதும் விளையாடவே இல்லை. பாகிஸ்தான் அணியும் ஐசிசி தொடர் போட்டிகளில் பங்கேற்க மட்டுமே இந்தியா வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Babar Azam, IPL, Pakistan cricket