VIDEO | கூல் கேப்டன் தோனியையே டென்சனாக்கிய தீபக் சாஹர்!

#MSDhoni loses cool after back-to-back no balls from #DeepakChahar | பஞ்சாப் அணியின் வெற்றிக்கு கடைசி 2 ஓவர்களில் 39 ரன்கள் தேவைப்பட்டது. #CSKvsKXIP

news18
Updated: April 7, 2019, 12:42 PM IST
VIDEO | கூல் கேப்டன் தோனியையே டென்சனாக்கிய தீபக் சாஹர்!
தீபக் சாஹருக்கு அறிவுரை கூறும் தோனி. (Twitter)
news18
Updated: April 7, 2019, 12:42 PM IST
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி கட்டத்தில் சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் நோபால்களாக வீசியதால் கூல் கேப்டன் தோனி பொறுமையை இழந்தார்.

ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரில் 18-வது லீக் போட்டி சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. அதில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொண்டது.

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு சென்னை அணி 160 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக, டூ பிளெசிஸ் 54 ரன்கள் எடுத்தார். அடுத்து களமிறங்கி பஞ்சாப் அணி கடைசி ஓவரில் தோல்வி அடைந்தாலும் கணிசமான ரன்களை அடித்தது.

CSK Beat KXIP, IPL, BCCI
கெய்ல் ஆட்டமிழந்த கொண்டாட்டத்தில் சென்னை வீரர்கள். (BCCI)


பஞ்சாப் அணியின் வெற்றிக்கு கடைசி 2 ஓவர்களில் 39 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் வீசினார். நோபால் ஆக வீசிய முதல் பந்தில் பவுண்டரியும், மீண்டும் நோபால் ஆக வீசிய 2-வது பந்தில் 2 ரன்களும் எடுக்கப்பட்டது. ஒரு பந்து கூட போடாமல் 8 ரன்கள் கொடுத்தார்.

அத்துடன், இடுப்புக்கு மேலே தொடர்ந்து 2 புல்டாஸ் நோபால் வீசியதால், அவரை தொடர்ந்து பந்துவீச நடுவர் அனுமதிக்க வில்லை. இதனால், கூல் கேப்டன் தோனி பொறுமையை இழந்து சாஹருக்கு அறிவுரை கூறினார். பின்னர், சரியாகப் பந்துவீசிய அவர் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.



இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.







முதல் போட்டியிலேயே அடித்து நொறுக்கிய மும்பை வீரர்!

ஹைத்ராபாத்துக்கு இப்படி ஒரு நிலையா?

ஜூனியர் வாட்சனுடன் ஓட்டப் பந்தயத்தில் போட்டி போட்ட தோனி

"நீ தோத்துட்டன்னு இந்த உலகமே சொன்னாலும்": அஜித் வசனத்தில் அசத்திய ஹர்பஜன் சிங்

Also Watch...






தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: April 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...