வீட்டுக்குப்போக பிளான் போடுறியா, அது என்கிட்ட நடக்காது என கேதர் ஜாதவை தல தோனி கலாய்க்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த 2019-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடர் கடந்த 23-ம் தேதி சென்னையில் தொடங்கியது.
சேப்பாக்கத்தில் நடைபெற்ற தொடக்க போட்டியில் தல தோனி தலைமையிலான நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கிங் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. அதில், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.
இதனை அடுத்து, சென்னை அணி தனது 2-வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்தப் போட்டி நாளை (மார்ச் 26) டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக சென்னை அணி வீரர்கள் விமானம் மூலம் புறப்பட்டனர்.
The safari begins! #WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/HRhQNdaSUA
— Chennai Super Kings (@ChennaiIPL) March 24, 2019
விமானத்திற்கு காத்திருந்தபோது, மொஹித் சர்மா எடுத்த வீடியோவில் ஆல்ரவுண்டர் கேதர் ஜாதவ் தொடக்க போட்டி குறித்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது, கடந்த சீசனைப் போலவே இந்த சீசனும் வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
அப்போதும் நான் களத்தில் இருந்தேன் என அவர் தெரிவித்தார். அருகில் இருந்த தோனி, அப்போ இந்த முறையும் வீட்டுக்கு போக திட்டமிட்டுள்ளாயா? என கலாய்த்தார்.
கடந்த சீசனில் முதல் போட்டியில் மட்டும் விளையாடிய கேதர் ஜாதவ், காயம் காரணமாக தொடர் முழுவதிலும் இருந்து விலகினார். அதை வைத்து தோனி கலாய்த்த வீடியோ வைரலாகி வருகிறது.
ஃபிஞ்ச் அதிரடியில் வீழ்ந்த பாகிஸ்தான் அணி!
தோனியின் 6 ஆண்டுகள் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!
இமாலய மைல்கல்லை விரட்டும் சிக்சர் மன்னன் கெய்ல்... இன்னும் 6 ரன்கள்தான் தேவை!
Also Watch...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: IPL 2019, Kedar Jadhav, MS Dhoni