Home /News /sports /

VIDEO: தோனியைப் பார்த்து வாயைப் பிளந்த ஆஸி. பவுலர்!

VIDEO: தோனியைப் பார்த்து வாயைப் பிளந்த ஆஸி. பவுலர்!

ஸ்டம்பிங்கை முறியடித்த தோனி. (BCCI)

ஸ்டம்பிங்கை முறியடித்த தோனி. (BCCI)

#MSDhoni does another full split to survive stumping | சிறப்பாக விளையாடிய தோனி 23 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து அவுட்டானார். #INDvAUS

  • News18
  • Last Updated :
பெங்களூருவில் நடந்த கடைசி டி-20 போட்டியில் தோனியின் ஆட்டத்தைப் பார்த்து ஆஸ்திரேலிய பவுலர் ஆடம் ஸாம்பா வியந்து பார்த்தார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டி-20 போட்டி பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் இன்று (பிப்.27) நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் பந்துவீச்சு தேர்வு செய்தார். அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

Kohli, finch
டாஸ் போடும் விராட் கோலி மற்றும் பிஞ்ச். (Cricket Australia)


தொடக்க வீரர்களாக ஷிகர் தவான், கே.எல்.ராகுல் களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய ராகுல் 26 பந்துகளில் 3 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் உள்பட 47 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். நீண்ட இடைவெளிக்குப்பின் வந்த தவான் (14), ரிஷப் பண்ட் (1) ஆகியோர் விரைவில் வெளியேறினர்.

பின்னர் வந்த தோனி, கேப்டன் கோலி உடன் சேர்ந்து கணிசமாக ரன்களைச் சேர்த்தார். சிறப்பாக விளையாடிய தோனி 40 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஸாம்பா வீசிய 12-வது ஓவரின் 2-வது பந்தில் தோனியை விக்கெட் கீப்பர் பீட்டர் ஹேண்ட்ஸ்ஹோம்ப் ஸ்டம்பிங் செய்ய முயற்சித்தார்.

Dhoni, தோனி
தோனியின் ஆட்டத்தைப் பார்த்து வாயைப் பிழந்த ஆடம் ஸாம்பா. (BCCI)


ஆனால், அது நடக்கவில்லை. தோனி பந்தை மிஸ் செய்தாலும் 2.14 மீட்டர் அகலத்திற்கு தனது காலை எளிதாக விரித்து கிரீஸை தொட்டார். இவரின் திறமையைப் பார்த்து ஆடம் ஸாம்பா வாயைப் பிழந்த வீடியோ வைரலாகி வருகிறது.



நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்தது.

தோனி, கோலி அதிரடி... இந்திய அணி 190 ரன்கள் குவிப்பு!

Also Watch...

Published by:Murugesan L
First published:

Tags: Cricket, India vs Australia, MS Dhoni

அடுத்த செய்தி