மகேந்திர சிங் தோனி இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். விளையாட்டின் வரலாற்றில் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவராக பரவலாக அங்கீகரிக்கப்பட்ட புகழ்பெற்ற கிரிக்கெட் வீரருக்கு சமூக ஊடகங்கள் வாழ்த்துக்களால் நிரம்பி வழிகின்றன.
தோனி தனது பிறந்தநாளை இங்கிலாந்தில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தனது மனைவி சாக்ஷி சிங்குடன் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோவைப் பகிர்ந்துகொண்டார். இந்த விருந்தில் இந்திய விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பன்ட்டும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தோனியும் அவரது மனைவி சாக்ஷியும் இங்கிலாந்தில் உள்ளனர், அங்கு இவர்கள் சமீபத்தில் தங்கள் 12 வது திருமண ஆண்டு விழாவையும் கொண்டாடினர். ஜூலை 4, 2010 அன்று தோனி, சாக்ஷியை கரம் பிடித்தார்.
தோனியின் கீழ், இந்தியா 72 டெஸ்ட் போட்டிகளில் 41 போட்டிகளையும், 200ல் 110 ODI போட்டிகளையும், 60ல் 27 T20I ஆட்டங்களையும் வென்றது. பேட்டிங் முன்னணியில், 2004 முதல் 2019 வரையிலான தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்வில் 17,226 ரன்கள் குவித்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு , 2019 உலகக் கோப்பையில் அணி அரையிறுதியில் வெளியேறியதன் மூலம், அவர் இந்தியாவுடனான அவரது புகழ்பெற்ற கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஓய்வு மூலம் நிறைவளித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.