Home /News /sports /

Video: மெஸ்சியாக மாறிய ‘தல’ தோனி.. போட்டியைக்காண குவிந்த ரசிகர்கள்..!

Video: மெஸ்சியாக மாறிய ‘தல’ தோனி.. போட்டியைக்காண குவிந்த ரசிகர்கள்..!

மும்பையில் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் நடந்தப்பட்ட கால்பந்து போட்டியில் மகேந்திர சிங் தோனி கலந்துகொண்டு விளையாடிய வீடியோ வைரலாகி வருகிற.

மும்பையில் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் நடந்தப்பட்ட கால்பந்து போட்டியில் மகேந்திர சிங் தோனி கலந்துகொண்டு விளையாடிய வீடியோ வைரலாகி வருகிற.

#MSDhoni attends charity football match in Mumbai | மகேந்திர சிங் தோனி, கிரிக்கெட் போட்டியை தவிர்த்து ஓய்வு நேரங்களில் அவ்வப்போது வேறு சில போட்டிகளிலும் விளையாடுவார்.

  • News18
  • Last Updated :
    மும்பையில் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் நடந்தப்பட்ட கால்பந்து போட்டியில் மகேந்திர சிங் தோனி கலந்துகொண்டு விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

    சர்வதேச கிரிக்கெட் அரங்கில் மகேந்திர சிங் தோனி மிகவும் பிரபலமான வீரர் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அவருக்கான ரசிகர்கள் கூட்டத்திற்கு பவுண்டரி எல்லைக்கோடு என்பது கிடையாது. 37 வயதிலும் தோனி, தனது அசாத்திய திறமையால், பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல் விக்கெட் கீப்பராகவும் அசத்தி வருகிறார்.

    Dhoni Stumping, தோனி ஸ்டம்பிங்
    மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்த தோனி. (BCCI)


    மகேந்திர சிங் தோனி, கிரிக்கெட் போட்டியை தவிர்த்து ஓய்வு நேரங்களில் அவ்வப்போது வேறு சில போட்டிகளிலும் விளையாடுவார். அவரின் விளையாட்டைப் பார்க்கவே ரசிகர்கள் கூட்டம் அலை மோதும். சில மாதங்களுக்கு முன்பு, ராஞ்சியில் நடந்த உள்ளூர் டென்னிஸ் போட்டியில் விளையாடி கோப்பையையும் வென்றார்.

    Dhoni Play Tennis
    டென்னிஸ் விளையாடும் தோனி (Twitter)


    தோனி ஓய்வு எப்போது என்று கேட்டவர்களுக்கு, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடுத்தடுத்து அரைசதங்கள் அடித்து அவர் பதிலடி கொடுத்தார். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியிலும் சிறப்பாக விளையாடிய தோனி, தற்போது இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் விளையாட உள்ளார்.

    இந்நிலையில், மும்பையில் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் நடந்தப்பட்ட கால்பந்து போட்டியில் மகேந்திர சிங் தோனி கலந்துகொண்டு விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.





    இந்தப் போட்டியில், பாலிவுட் பிரபலங்களான டினோ மொரே, அபர்ஷக்தி குரானா, மார்க் ராபின்சன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு விளையாடினர்.



    பாகிஸ்தானுடன் எப்போதும் இந்தியா விளையாடக் கூடாது... வலுக்கும் எதிர்ப்பு!

    Also Watch...

    Published by:Murugesan L
    First published:

    Tags: Football, MS Dhoni

    அடுத்த செய்தி