ஸ்டீவ் ஸ்மித்தை வீழ்த்த மொகமட் ரிஸ்வான் வகுத்த சூப்பர் பிளான்- வீடியோ
ஸ்டீவ் ஸ்மித்தை வீழ்த்த மொகமட் ரிஸ்வான் வகுத்த சூப்பர் பிளான்- வீடியோ
ரிஸ்வான்.
ஸ்டீவ் ஸ்மித்தை ஆஃப் திசையில் ஆடவிட்டால் அவ்வளவுதான் அம்போதான் அதனால் லெக் ஸ்டம்பில் 7 பேரை நிறுத்திக் கொண்டு நெகெட்டிவ் பவுலிங் என்று சொல்வார்களே அதை இடது கை ஸ்பின்னர் நவ்மன் பயன்படுத்தினார். இதனையடுத்து விக்கெட் கீப்பர் மொகமட் ரிஸ்வான் லெக் திசையிலேயே நின்றார்.
பொதுவாக ஸ்டீவ் ஸ்மித் செட்டில் ஆகிவிட்டால் அவரை வெளியேற்றுவது கடினமானது. ஸ்டீவ் ஸ்மித் தனது டெஸ்ட் வாழ்க்கையில் பல பெரிய ஸ்கோரைப் படைத்துள்ளார். மேலும், ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தால், ஸ்மித் சதமெடுக்கும் வாய்ப்பை இழக்க மாட்டார். அவர் செட் ஆனவுடன், அவர் போன்ற பெரிய மீனை விழுங்க ஒரு தந்திரோபாய புத்திசாலித்தனம் தேவை. முகமது ரிஸ்வான் அதில் கொஞ்சம் காட்டினார்.
பாகிஸ்தான் , ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ராவல்பிண்டி செத்த பிட்சில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி ட்ரா ஆனது, சுமார் 1200 ரன்கள் பக்கம் குவித்தாலும் 14 விக்கெட்டுகள்தான் விழுந்தன. இதில் பாகிஸ்தான் தரப்பில் 3 பேர் சதமெடுக்க, அதுவும் இமாம் உல் ஹக் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமெடுத்தார்.
இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியில் யாரும் சதமெடுக்கவில்லை, வார்னர் 68 ரன்களிலும் உஸ்மான் கவாஜா 97 ரன்களிலும் லபுஷேன் 90 ரன்களிலும், ஸ்மித் 78 ரன்களிலும் ஆட்டமிழந்தனர், யாரும் சதமெடுக்கவில்லை.
நௌமன் அலி உஸ்மான் கவாஜாவை வெளியேற்றிய பிறகு ஸ்மித் பேட்டிங் செய்ய வந்தார். வலது கை வீரர் தனது பெல்ட்டின் கீழ் ஒரு பெரிய ஸ்கோரை குவிக்க நிதானமாக ஆடினார். பிட்சில் ஒன்றுமில்லை ஆடிக்கொண்டேயிருக்கலாம், இதில் ஸ்மித்தை வீழ்த்த புத்தி சாதுரியம் தேவை. ஸ்மித் 196 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் எடுத்தார். ஆனால் ரிஸ்வானின் தந்திர புத்திசாலித்தனத்தால் அவர் வெளியேறினார். இடது கை சுழற்பந்து வீச்சாளர் நௌமன் அலி லெக்-ஸ்டம்ப் லைனில் பந்துவீசும்போது ஸ்மித் கடினமான ஸ்வீப்களை விளையாடினார்.
ஸ்டீவ் ஸ்மித்தை ஆஃப் திசையில் ஆடவிட்டால் அவ்வளவுதான் அம்போதான் அதனால் லெக் ஸ்டம்பில் 7 பேரை நிறுத்திக் கொண்டு நெகெட்டிவ் பவுலிங் என்று சொல்வார்களே அதை இடது கை ஸ்பின்னர் நவ்மன் பயன்படுத்தினார். இதனையடுத்து விக்கெட் கீப்பர் மொகமட் ரிஸ்வான் லெக் திசையிலேயே நின்றார்.
125 வது ஓவரின் இறுதிபந்துக்கு முதல் பந்தில் நௌமன் ஒரு ஃப்ளைட் டெலிவரியை லெக்-ஸ்டம்பில் வீசினார், ஸ்மித் முழு பலத்துடன் ஸ்வீப் செய்தார். ஆனால் டைமிங் சரியாக அமையவில்லை, காரணம் நவ்மன் அந்தப் பந்தை மெதுவாக வீசினார். அதனால் ஸ்மித் கிளவ்வில் பட்டு ரிஸ்வானுக்கு எளிதாக கேட்ச் ஆனது. ஸ்மித் அவுட் ஆனதை அறிந்தார், எனவே, பெவிலியன் நோக்கித் நடக்கத் தொடங்கினார்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.