Video: ஒரு ரன் அவுட் கொடுக்க இவ்வளவு நேரமா? கடுப்பான தெ.ஆப்ரிக்க வீரர்கள்!

Watch: Longest run out decision ever? | ரன் அவுட் செய்யும்போது இரண்டு வீரர்களும் ஒன்றாக ஓடியதால் இருவரில் யார் அவுட் என குழப்பம் நிலவியது. #ShoaibMalik #SAvPAK

Video: ஒரு ரன் அவுட் கொடுக்க இவ்வளவு நேரமா? கடுப்பான தெ.ஆப்ரிக்க வீரர்கள்!
ரன் அவுட் குழப்பம். (Video Grab)
  • News18
  • Last Updated: February 8, 2019, 8:09 PM IST
  • Share this:
ஒரு ரன் அவுட் முடிவை அறிவிக்க அம்பயர் சுமார் 2 நிமிடங்கள் எடுத்துக்கொண்டதால் தென்னாப்ரிக்க அணி வீரர்கள் எரிச்சல் அடைந்தனர்.

தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, 3 விதமான தொடர்களில் விளையாடியது. டெஸ்ட் தொடரை 0-3 எனவும், ஒரு நாள் தொடரை 2-3 எனவும், டி-20 தொடரை 1-2 எனவும் பாகிஸ்தான் அணி இழந்தது.

South Africa Team, தென்னாப்ரிக்க அணி
டி-20 தொடரை வென்ற மகிழ்ச்சியில் தென்னாப்ரிக்க அணி வீரர்கள். (CricketSA)



தென்னாப்ரிக்கா - பாகிஸ்தான் அணிகள் மோதிய கடைசி டி-20 போட்டி செஞ்சுரியன் மைதானத்தில் நேற்று முன்தினம் (பிப்.6) நடந்தது. இந்தப் போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்து டி-20 தொடரை இழந்த பாகிஸ்தான் அணி கடைசிப் போட்டியில் ஆறுதல் வெற்றிபெற்றது.

Pakistan Team, பாகிஸ்தான் அணி
கடைசி டி-20 போட்டியில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் பாகிஸ்தான் வீரர்கள். (CricketSA)


இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கின்போது, தென்னாப்ரிக்காவின் சுழற்பந்து வீச்சாளர் தப்ரைஸ் ஷம்சி வீசினார். அந்த ஓவரின் 2-வது பந்தை எதிர்கொண்ட கேப்டன் சோயப் மாலிக், பந்தை லெக் சைடில் அடிக்க, அங்கு பீல்டிங் செய்துகொண்டிருந்த பெலுக்வாயோ பந்தை பிடித்து கீப்பரிடம் எறிந்தார்.விக்கெட் கீப்பர் கிளாசன் ரன் அவுட் செய்தார். ஆனால், சோயப் மாலிக் மறுமுனையை நோக்கி ஓடினார். மறுமுனையில் இருந்த ஹுசைன் தலாத்தும் பாதி தூரம் ஓடி வந்துவிட்டு திரும்பிச் சென்றார். இதனால், இருவரும் ஒன்றாக ஓடியதால் இருவரில் யார் அவுட்? என குழப்பம் நிலவியது.



shoaibmalik_edit_0 from Not This Time on Vimeo.

சுமார் 2 நிமிடங்களுக்குப்பின், இருவரும் ஒரே திசையில் ஓடினாலும் முன்னாள் ஓடிய வீரரைவிட சோயப் மாலிக் சற்றுப் பின்தங்கியதால், அவரே அவுட் என 3-வது அம்பயர் தீர்ப்பளித்தார். ரன் அவுட் முடிவை அறிவிக்க நீண்டநேரம் எடுத்துக்கொண்டதால் தென்னாப்ரிக்க அணி வீரர்கள் எரிச்சல் அடைந்தனர்.

Video: அடேங்கப்பா... ஒரே பந்தில் 17 ரன்கள் கொடுத்த ஆஸி. பவுலர்!

Also Watch...

First published: February 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்