இணைபிரியா நட்பென்றால் இப்படி இருக்கனும்... ஒரே தட்டில் சாப்பிட்ட தோனி - ஜாதவ்!

#KedarJadhav's #bromance with #MSDhoni | தோனி - ஜாதவ் ஆகியோர் ஒரே தட்டில் சாப்பிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

news18
Updated: April 15, 2019, 4:38 PM IST
இணைபிரியா நட்பென்றால் இப்படி இருக்கனும்... ஒரே தட்டில் சாப்பிட்ட தோனி - ஜாதவ்!
தோனிக்கு ஊட்டிவிட்ட ஜாதவ்.
news18
Updated: April 15, 2019, 4:38 PM IST
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தல தோனி - கேதர் ஜாதவ், மைதானத்தில் மட்டுமல்லாமல் எப்பவும் இணைபிரியாத நண்பர்களாக இருந்து வருகின்றனர்.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற சி.எஸ்.கே அணியின் கேப்டன் தோனி பவுலிங் தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக, கிறிஸ் லின் 51 பந்திகளில் 82 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அடுத்துக்களமிறங்கிய சென்னை அணி, ரெய்னா (58), ஜடேஜா (31) ஆகியோரின் அதிரடியால் 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Ravindra Jadeja, CSK, IPL
வின்னிங் ஷார்ட் அடித்த மகிழ்ச்சியில் ஜடேஜா. (BCCI)


போட்டி முடிந்த பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் இரவு உணவு சாப்பிடச் சென்றனர். மைதானத்தில் இணைபிரியாத நண்பர்களாக இருந்து வரும் தல தோனி - கேதர் ஜாதவ் ஆகியோர் அங்கும் ஒன்றாக ஒரே தட்டில் சாப்பிட்டனர். தோனிக்கு ஜாதவ் ஊட்டிவிட்டார். இந்த வீடியோ ஜாதவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
View this post on Instagram
 

Bromance ❤️


A post shared by Kedar Jadhav (@kedarjadhavofficial) on


தோனி - ஜாதவ் ஆகியோர் ஒரே தட்டில் சாப்பிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.உலகக் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு!

ஒற்றை இலக்க ரன்களில் சுருண்ட வீரர்கள்! டெல்லி அணியிடம் தோற்ற ஹைதராபாத்
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...