ரசெலை சமாளிக்க தோனியின் புதிய திட்டம்!

#MSDhoni reacts to #AndreRussell’s 36-ball 88* in #IPL2018 | சேப்பாக்கத்தில் நடந்த கடைசி மோதலில் பேட்டிங் செய்த ரசெல் 36 பந்துகளில் 88 ரன்கள் விளாசினார்.

ரசெலை சமாளிக்க தோனியின் புதிய திட்டம்!
தோனி மற்றும் ரசெல். (Twitter)
  • News18
  • Last Updated: April 9, 2019, 4:26 PM IST
  • Share this:
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரசெலை வீழ்த்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி புதிய திட்டத்தை வைத்துள்ளார்.

2019 ஐ.பி.எல் தொடரின் 23-வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

நடப்பு சீசனில் இரு அணிகளும் தலா 5 போட்டிகளில் விளையாடி தலா 4 வெற்றி மற்றும் ஒரு தோல்வியைப் பெற்றுள்ளன. புள்ளிப்பட்டிலியல் கொல்கத்தா முதலிடத்திலும், சென்னை 2-வது இடத்திலும் உள்ளது.


Dhoni vs Dinesh Karthik,
தோனி உடன் தினேஷ் கார்த்திக்.


சேப்பாக்கத்தில் நடந்த கடைசி மோதலில் முதலில் பேட்டிங் செய்த ரசெல் 36 பந்துகளில் 88 ரன்கள் விளாசினார். இதனால், கொல்கத்த அணி 202 ரன்கள் குவித்தது.

பின்னர், விளையாடிய சென்னை அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. அதேபோல், இந்த முறை செம ஃபார்மில் இருக்கும் ரசெல், சென்னை அணிக்கு அச்சுறுத்தலாக இருப்பார். இவரை சமாளிக்க தோனி புதிய திட்டம் வைத்துள்ளார்.இதுகுறித்து, தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர், “நான் அதை மீண்டும் நினைவுகூற வேண்டுமா?, விக்கெட் கீப்பர் மற்றும் பவுலரை தவிர, எங்களிடம் 9 ஃபீல்டர்கள் இருக்கின்றனர். அனைத்து வீரர்களும் சர்கிலுக்கு வெளியே நிறுத்தப்படுவார்கள்.

மைதானத்துக்கு வெளியே செல்ல யாருக்கும் அனுமதியில்லை. பின்னர், எந்த பேட்ஸ்மேன் நிறைய சிக்ஸர்கள் அடிப்பார்?” என்று தெரிவித்தார்.



இந்த வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

#CSKvKKR | கொல்கத்தாவை சமாளிக்குமா சி.எஸ்.கே?

கொல்கத்தாவை வீழ்த்த அனல் பறக்கும் பயிற்சியில் சி.எஸ்.கே வீரர்கள்!


VIDEO | சகவீரருக்கு மொட்டை அடித்துவிட்ட பிராவோ!

களத்தில் இறங்கிய சி.எஸ்.கே ரசிகர்கள்! பெருமைப்படும் சுரேஷ் ரெய்னா

Also Watch..






தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: April 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்