ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஷாஹின் ஷா அப்ரீடி, ரஷீத் கானை துவைத்து காயப்போட்ட ‘உக்கிர’ ஜேசன் ராய்

ஷாஹின் ஷா அப்ரீடி, ரஷீத் கானை துவைத்து காயப்போட்ட ‘உக்கிர’ ஜேசன் ராய்

ஜேசன் ராய்

ஜேசன் ராய்

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் ஜேசன் ராயின் அபார சதத்தால் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் லாகூர் கலாண்டர்ஸ் அணிக்கு எதிராக 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ஜேசன் ராய் தனது திகைப்பூட்டும் அதிரடி இன்னிங்ஸில் 8 சிக்ஸர்கள் மற்றும் 11 பவுண்டரிகளை அடித்தார், இது குவெட்டா கிளாடியேட்டர்ஸ், லாகூர் கலாண்டர்ஸை வீழ்த்த உதவியது.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் ஜேசன் ராயின் அபார சதத்தால் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் லாகூர் கலாண்டர்ஸ் அணிக்கு எதிராக 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ஜேசன் ராய் தனது திகைப்பூட்டும் அதிரடி இன்னிங்ஸில் 8 சிக்ஸர்கள் மற்றும் 11 பவுண்டரிகளை அடித்தார், இது குவெட்டா கிளாடியேட்டர்ஸ், லாகூர் கலாண்டர்ஸை வீழ்த்த உதவியது.

  ரஷித் கான், ஷஹீன் ஷா அப்ரிடி மற்றும் ஹாரிஸ் ரவுஃப் ஆகியோரைக் கொண்ட வலுவான லாகூர் பந்துவீச்சை ஜேசன் ராய், துவைத்துக் காயப்போட்டு இஸ்திரி செய்தார். 57 பந்துகளில் 116 ரன்கள் எடுத்தார், குவெட்டா 19.3 ஓவர்களில் 205 ரன்கள் என்ற கடினமான இலக்கை எட்டியது.

  இந்தப் போட்டி வரலாற்றில் இரண்டாவது அதிக வெற்றிகரமான ரன் சேஸ் ஆகும். ராய் தனது முதல் 50 ரன்களை 20 பந்துகளில் எடுத்தார், அவரது இரண்டாவது 50 ரன்கள் 29 பந்துகளில் வந்தது. அவர் 13வது ஓவரில் மிட் விக்கெட்டுக்கு மேல் ஒரு பெரிய சிக்சருடன் தனது சதத்தை எட்டினார்.

  குவெட்டா துரத்தலின் முதல் ஓவரிலேயே அவர் இரண்டாவது பந்தில் ஷாஹீன் அஃப்ரிடியை இறங்கி வந்து லாங் ஆஃப் மேல் ஸ்ட்ரெய்ட் பேக் சிக்சருக்கு அடித்தார். குவெட்டாவின் முக்கிய சீமர்களான அப்ரிடி மற்றும் ரவுஃப் ஆகியோரைத் தொடர்ந்து தாக்கினார். ராயின் தாக்குதல் அதோடு நிற்கவில்லை. லெக் ஸ்பின்னர் ரஷித் கான் கூட விடுபடவில்லை. அவரை ஸ்கொயர் லெக்கில் ஸ்வீப் சிக்ஸ் அடித்தார் ராய்.

  ஜேசன் ராய், அப்ரீடியை அடித்த சிக்ஸ் வீடியோ:

  ராயின் 116 ரன் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் பேட்டரின் முதல் சதம் மற்றும் பாகிஸ்தான் லீக் வரலாற்றில் ஒட்டுமொத்தமாக 11 வது சதம். தென் ஆப்பிரிக்காவின் ரைலீ ரூசோவின் 43 பந்துகளில் சதத்திற்குப் பிறகு இது இரண்டாவது அதிவேக 100 ஆகும்.

  ராய் 167 ரன்களில் வெளியேறியபோது, ​​குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கு 26 பந்துகளில் 38 ரன்கள் தேவைப்பட்டது, இப்திகார் அகமதுவின் கூடுதல் இழப்புடன் இலக்கை எட்டி அசாத்தியமான வெற்றியை ஈட்டினர்.

  Published by:Muthukumar
  First published:

  Tags: Pakistan cricket, T20