ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

James Anderson 1000 | 19 ரன்களுக்கு 7 விக்கெட்; ஜேம்ஸ் ஆண்டர்சன் உலக சாதனை! ஆட முடியாத பந்தை வீசி 1000 விக். மைல்கல்!  (வீடியோ)

James Anderson 1000 | 19 ரன்களுக்கு 7 விக்கெட்; ஜேம்ஸ் ஆண்டர்சன் உலக சாதனை! ஆட முடியாத பந்தை வீசி 1000 விக். மைல்கல்!  (வீடியோ)

ஆண்டர்சன்.

ஆண்டர்சன்.

மான்செஸ்டரில் நடைபெற்ற லங்காஷயர்-கெண்ட் அணிகளுக்கு இடையிலான கவுண்ட்டி கிரிக்கெட் போட்டியில் மிகச்சிறப்பான ஆட முடியாத ஒரு பந்தில் விக்கெட்டைக் கைப்பற்றி தன் 1000-வது விக்கெட்டை வீழ்த்தினார் இங்கிலாந்து லெஜண்ட் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

  • Cricketnext
  • 2 minute read
  • Last Updated :

மான்செஸ்டரில் நடைபெற்ற லங்காஷயர்-கெண்ட் அணிகளுக்கு இடையிலான கவுண்ட்டி கிரிக்கெட் போட்டியில் மிகச்சிறப்பான ஆட முடியாத ஒரு பந்தில் விக்கெட்டைக் கைப்பற்றி தன் 1000-வது விக்கெட்டை வீழ்த்தினார் இங்கிலாந்து லெஜண்ட் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

கெண்ட் வீரரான தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஹெய்னோ குன் என்பவருக்கு மிடில் அண்ட் லெக்கில் பிட்ச் செய்து குடை போன்று ஸ்விங் செய்ய அது மட்டையின் வெளிவிளிம்பில் பட்டு ஸ்லிப்பில் கேட்ச் ஆனது, ஆட முடியாத பந்து அது.

ஆண்டர்சன் இதுவரை 617 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்து உலகிலேயே அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவர் தற்போது அனைத்து கிரிக்கெட்டிலும் 1000 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனை படைத்தார். 162 டெஸ்ட்களில் ஆடி சாதனை புரிந்துள்ளார்.

இது தொடர்பாக ஆண்டர்சன் கூறும்போது, “ஒரு வேகப்பந்து வீச்சாளராக இத்தனைப் போட்டிகளில் ஆடியது எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

எனக்கே இது ஆச்சரியமாக இருக்கிறது, இன்னும் ஆடிக்கொண்டிருக்கிறேன் என்பது ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. என் உடல் களைப்படையவில்லை. வயதான அறிகுறியும் இல்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டெஸ்ட் கிரிக்கெட் எனக்கு மிகவும் பிடித்த வடிவம், அதன் மீது எனக்கு தீராப்பற்று இருக்கிறது. இங்கிலாந்துக்காக டெஸ்ட் கிரிக்கெட் ஆடிகொண்டேயிருக்க வேண்டும். இதை நீண்ட் நாட்களுக்கு என்னால் செய்ய முடிந்தது குறித்து மகிழ்ச்சியே என்றார்.

1000வது விக்கெட்டை வீழ்த்திய பந்து இந்திய பேட்ஸ்மென்களுக்கு காத்திருக்கும் வேதனையை அறிவுறுத்துவதாக உள்ளது. லெக் அண்ட் மிடிலில் பிட்ச் ஆகி பந்து அவுட் ஸ்விங் ஆகி மட்டையின் வெளி விளிம்பில் பட்டு கேட்ச் ஆகிறது என்றால், இப்படி அவருக்கு இந்தியாவுக்கு எதிராக விழத்தொடங்கினால் இன்னொரு 36 ஆல் அவுட்டை எதிர்பார்க்கலாம்.

First published:

Tags: England, India Vs England, James anderson