நியூசிலாந்து சென்றது இந்திய கிரிக்கெட் அணி!

#IndianTeam Arrives In New Zealand | இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது. #AUSvIND #NZvIND

நியூசிலாந்து சென்றது இந்திய கிரிக்கெட் அணி!
நியூசிலாந்தில் தோனி. (Twitter)
  • News18
  • Last Updated: January 21, 2019, 11:32 AM IST
  • Share this:
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, நியூசிலாந்து சென்றடைந்த இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆக்லாந்து விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி, 3 டி-20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடியது. இரு அணிகள் இடையிலான டி-20 தொடர் டிராவில் முடிந்தது. பின்னர் நடந்த டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய மண்ணில் முதல்முறையாக கைப்பற்றி இந்திய அணி வரலாறு படைத்தது.

Indian Cricket Team, இந்திய கிரிக்கெட் அணி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முதல் முறையாக வென்று இந்திய அணி வரலாறு படைத்தது. (Cricket Australia)இதனை அடுத்து நடந்த ஒரு நாள் தொடர், முதல் இரண்டு போட்டிகள் முடிவில் 1-1 என சமனில் இருந்தது. மெல்போர்னில் நடந்த 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, அந்நாட்டு மண்ணில் முதல்முறையாக ஒரு நாள் தொடரை வென்று சாதித்தது.

team india, இந்திய அணி
ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக வரலாற்று சாதனை படைத்த இந்திய அணி. (BCCI)


ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்ட கையோடு, நாடு திரும்பாமல் அங்கிருந்து நியூசிலாந்துக்கு சென்றது இந்திய கிரிக்கெட் அணி. ஆக்லாந்து விமான நிலையம் வந்த இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.கேப்டன் விராட் கோலி, மகேந்திர சிங் தோனி, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட வீரர்கள் ஆக்லாந்து சென்றடைந்த வீடியோவை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் நடைபெற உள்ளது. இரு அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி வரும் 23-ம் தேதி நேப்பியர் நகரில் உள்ள மெக்லேன் பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது.

ஆஸி. ஓபன்: 20-வயது வீரரிடம் ஃபெடரெர் அதிர்ச்சி தோல்வி!

Also Watch...

First published: January 20, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading