ஒரே பவுன்சரில் தேசிய அணியில் இடம்பிடித்த வேகப்புயல்: எப்படி?- நீங்களே பாருங்கள்

குல்ஷன் ஜாவின் அற்புத பவுன்சர்.

அந்த ஒரு பந்து அனைவரையும் நிமிர்ந்து உட்காரச் செய்து அவர் பெயரைக் குறிக்கச் செய்துள்ளது. நேபாள் கிரிக்கெட்டின் வேகப்பந்து வீச்சாளர் புதிய சென்சேஷன் குல்ஷன் ஜா வீசும்போது தேர்வுக்குழுவை இப்படித்தான் நினைக்கச் செய்தது.

 • Share this:
  அந்த ஒரு பந்து அனைவரையும் நிமிர்ந்து உட்காரச் செய்து அவர் பெயரைக் குறிக்கச் செய்துள்ளது. நேபாள் கிரிக்கெட்டின் வேகப்பந்து வீச்சாளர் புதிய சென்சேஷன் குல்ஷன் ஜா வீசும்போது தேர்வுக்குழுவை இப்படித்தான் நினைக்கச் செய்தது.

  இந்த குல்ஷன் ஜா இதுவரை 2 உள்நாட்டுப் போட்டிகளில் மட்டும்தான் ஆடியுள்ளார். ஆனால் இந்த 2 போட்டிகளில் இவர் பந்து வீசிய விதம் அணித்தேர்வாளர்களை வாயைப் பிளக்க வைத்தது. இதனையடுத்து நேபாள் கிரிக்கெட் அணிக்குள் குல்ஷன் ஜா சேர்க்கப்பட்டுள்ளார்.

  நேபாளம், யுஎஸ், ஓமான் அளிகளுக்கு இடையிலான முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் குல்ஷன் ஜா சேர்க்கப்பட்டார்.

  இந்த முத்தரப்பு தொடர் செப்டம்பர் 14 முதல் 20ம் தேதி வரை ஓமானில் நடக்கிறது. நேபாள் போலீஸ் கிளப் அணிக்காக 2 போட்டிகள் ஆடி அவர் தேர்வுக்குழுவின் கவனத்தை ஈர்த்துள்ளார் குல்ஷான் ஜா.

  நேபாள் போலிஸ் கிளப்புக்கும் நேபாள் ஆயுதப்படை கிளப்புக்கும் இடையிலான போட்டியில் குல்ஷான் வீசிய வேகப்பந்து, பவுன்சருக்கு எதிரணி வீரர்கள் அனைவரும் ஏறக்குறைய கிரீசில் டான்ஸ்தான். 7 ஓவர்களில் 36 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார்.காத்மண்டு மேயர் அணிக்கு எதிராக குல்ஷான் ஜா, காடக் பொஹோரா என்ற வீரருக்கு வீசும்போது அவர் ஹெல்மெட்டுக்கு அருகே விஸ் என்ற காற்றின் ஒலியுடன் பந்து கடந்து சென்றது, பேட்ஸ்மென் எம்பிக் குதித்து ஒதுங்கினார், செத்த ஆட்டக்களத்தில் இப்படி பவுன்ஸ் செய்த குல்ஷன் ஜா-வைத் தேர்வு செய்யாமல் எப்படி இருக்க முடியும்.

  இதோ நீங்களே பாருங்கள் வீடியோவை:  முத்தரப்பு தொடருக்கு முன்னதாக நேபாள் அணி பபுவா நியுகினியா அணியுடன் 2 ஒருநாள் சர்வதேசப் போட்டியில் ஆடவிருக்கிறது
  Published by:Muthukumar
  First published: